Jayamravi: விவாகரத்து வழக்கில்.. ஆஜரான ஜெயம் ரவி.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் செப்டம்பர் மாதம் முன்பு அறிவித்து இருந்தார். ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பு சோசியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது. இதைத்தொடர்ந்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி முக்கிய ஆணை பிறப்பித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 9ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்கான எடுக்கப்பட்டு முடிவு என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

jayam ravi aarthi divorce

விவாகரத்து வழக்கு: இந்த அதிர்ச்சியில் இருந்து அவரது ரசிகர்கள் மீளாத நிலையில், தனது பிறந்த நாள் அன்று, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரி இருந்தார்.

jayam ravi aarthi divorce

சந்தித்து பேச வேண்டும்: இதையடுத்து,ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அதில், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும், அது என் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை,நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

நீதிபதி அதிரடி உத்தரவு: இந்நிலையில், ஜெயம் ரவி தொடர்ந்து விவாகரத்து வழக்கு இன்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார்.ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இருவருக்கும் இடையேயான பிரச்சினை தொடர்பாக குடும்பநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்து பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விபரங்களை இன்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X