ஜெயம் ரவியை ஆட்டுவிக்கும் பாடகி.. யார் இந்த கெனிஷா பிரான்சிஸ்? கோவாவில் நடந்தது என்ன?
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. கடந்த 2009 ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், இத்தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து, 9ந் தேதி ஜெயம் ரவி, தனது மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இதற்கு பதில் அளித்த ஆர்த்தி, இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று தெளிவுபடுத்தினார்.பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கவுரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக ஆர்த்தி கூறியிருந்தார்.

ஜெயம் ரவி: இவர்கள் இருவரின் பிரிவுக்கு காரணம், ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் இடையே ஏற்பட்ட பழக்கம் தான் என கூறப்பட்டது. இந்த பாடகி கெனிஷாவை ஜெயம் ரவி, நண்பர்களுடன் கோவா ட்ரிப்புக்கு சென்ற போது சந்தித்தாக கூறப்படுகிறது. இந்த கெனிஷா பிரான்சிஸ் ஆரம்பத்தில் கோவாவில் பப்களில் பாடிய இவர், பல ஆல்பம் பாடல்களை பாடி உள்ளார். தமிழில் இவர் ஜீவா தயாரித்த ஆல்பம் ஒன்றிலும் பாடி உள்ளார்.
யார் இந்த கெனிஷா:வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கெனிஷா, பின் பெங்களுரில் குடும்பத்தோடு செட்டில் ஆனார். கிறிஸ்தவ குடும்பம் என்பதால், கெனிஷா 12 வயதில் இருந்தே தேவாலயத்தில் பாடத் தொடங்கினார். பின்னர் விட்னி ஹூஸ்டன், பியோனஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரால் ஊக்கப்படுத்தப்பட்டது பல மேடைகளில் பாடல்கள் பாடி வந்தார். ஆங்கிலம், இந்தி,தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற 6 மொழிகளில் பாடி வருகிறார். பிண்ணனி பாடல்களும் நடனம் ஆடி படுவது கெனிஷாக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
திருமணமானவர்: இந்தியாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ள கெனிஷா, ஸ்பிருச்சுவல் ஹீலிங் மற்றும் ரெய்கி சிகிச்சை மூலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற சிக்கல்களிலிருந்து குணமடைய சிகிச்சை அளித்து வருகிறார். இதன் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தியுள்ளார் கெனிஷா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இவரது கணவர் யார் என்கிற எந்த விவரத்தையும் இவர் வெளியிடாமல் ரகசியமாக வைத்து இருக்கிறார். இவரின் மாயாஜால குரலில் லாபித்துப்போன ஜெயம் ரவி, கெனிஷாவிற்கு நண்பராகி இருக்கிறார். அதன் பின் இருவரும் நெருங்கி பழக அது, ஆர்த்தி ஜெயம் ரவி குடும்பத்தில் விரிசல் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
கவலையில் ஆர்த்தி: இது அனைத்தையும் தாண்டி, 14வது திருமண நாளில் கூட ஜெயம் ரவி மனைவியுடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஷூட்டிங் இருக்கு என்று சொல்லிவிட்டு அவர் கோவா சென்றுவிட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட ஆர்த்தி, கோவாவிற்கு சென்று ஜெயம்ரவியை சந்திக்க பல முறை முயற்சி செய்தும், அவரை சந்திக்க முடியாமல் போனதாம். அது மட்டுமில்லாமல், கோவாவில் ஜெயம் ரவியின் விலை உயர்ந்த காரை, கெனிஷா வேகமாக ஓட்டிச்சென்று அபராதமும் கட்டி உள்ளார். இதற்கான ரசீது வெளியானதைத் தொடர்ந்து தான் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியின் போட்டோக்களை டெலிட் செய்துள்ளார் என்று பிரபல ஊடகம் ஒன்று அலசி ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளது.
வருத்தத்தில் ரசிகர்கள்: இதைத்தொடர்ந்து தான் செப்டம்பர் 9ந் தேதி ஜெயம் ரவி, ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அது மட்டுமில்லாமல் தனது பிறந்த நாள் இன்று ஆர்த்தி உடனான நடந்த திருமணத்தை ரத்து செய்யகோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நம் கண் முன் ஆசை ஆசையாக பார்த்து மகிழ்ந்த ஒரு அழகான குடும்பம் இப்போது சின்னாபின்னமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











