ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு.. ஆர்த்தி சொன்ன விஷயம்.. விசாரணை தள்ளிவைப்பு!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீபிதி ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். சமரச பேச்சுவார்த்தைக்கு ஆர்த்தி வராததால், வழக்கை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, 'ஜெயம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஜெயம் ரவிக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. இதையடுத்து படத்தின் பெயரை தனது பெயரோடு சேர்த்துக்கொண்டார். அந்த படத்து தொடர்ந்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், தாஸ், சந்தோஷ் சுப்பிரமணியம் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார்.

கருத்துவேறுபாடு: தமிழ் சினிமாவின் பஸியான நடிகராக மாறிய ஜெயம் ரவி, 2009-ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு காலமாக மனம் ஒத்து வாழ்ந்து வந்த இவர்களின் திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
விவாகரத்தில் உடன்பாடு இல்லை: இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, வெளியிட்ட அறிக்கையில், இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி என் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுத்துள்ளார். இந்த விவாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
சமரச பேச்சுவார்த்தை : இந்நிலையில், ஜெயம் ரவி தொடர்ந்து விவாகரத்து வழக்கு நேற்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்த நிலையில்,.ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதீபதி, குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என்றும், அதுகுறித்த விவரம் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டு இருந்தார்.
விசாரணை தள்ளிவைப்பு: இதையடுத்து, ஜெயம் ரவி தொடர்ந்து விவாகரத்து வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் ஜெயம் ரவி ஆஜரான நிலையில், ஆர்த்தி தனக்கு உடல் நிலை சரியில்லாததால், இன்றைய தினம் பேச்சு வார்த்தைக்கு வரமுடியவில்லை என்றும், எனவே பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுகொண்டார். இதையடுத்து, ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி, விசாரணையை நவம்பர் 27ம் தேதி மாலை நான்கு மணிக்கு தள்ளிவைத்தார்.


Click it and Unblock the Notifications











