பச்சை வானத்தை பார்க்க.. மனைவியை ஃபின்லாந்து கூட்டிச் சென்ற பொன்னியின் செல்வன்.. வேறலெவல்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி ரவியுடன் ஃபின்லாந்து சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன.
இயற்கையில் உள்ள கோடிக்கணக்கான மாயாஜாலங்களில் ஒன்றான ஃபின்லாந்தில் தெரியும் பச்சை நிற வானமும் ஒன்று.
அங்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

சம்மர் டூர்:
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஜெயம் ரவி பிசியாவார் என எதிர்பார்த்தால், அழகாக தனது மனைவியுடன் ஃபின்லாந்தில் ஜாலி டூர் அடித்து வருகிறார்.
சமீபத்தில், கிழக்கு கடற்கரைச் சாலையில், பிரம்மாண்டமாக வீடு கட்டி குடும்பத்துடன் குடி புகுந்திருந்தார் ஜெயம் ரவி. அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவி ஷேர் செய்திருந்தார்.
மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலுக்கு கணவர் ஜெயம் ரவியுடன் சென்ற போது எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் போட்டோக்களையும் அழகாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணிவகுத்து ஹீரோயின்களையே பொறாமைப்பட வைத்திருந்தார் ஆர்த்தி ரவி.

பல படங்கள்:
பொன்னியின் செல்வன் 2, இறைவன், சைரன், ஜீனி என கைவசம் வரிசையாக படங்களை வைத்திருந்தாலும், குடும்பத்துக்கான நேரத்தையும் சரியாக செலவிட்டு வருகிறார் ஜெயம் ரவி. சம்மர் ஆரம்பித்த நிலையில், தனது சம்சாரத்துடன் ஃபின்லாந்துக்கு சென்று பனிமலைகளில் சறுக்கி விளையாடும் வீடியோ ரீல்களையும் இரவில் பச்சை நிறமாக காட்சியளிக்கும் வானத்துக்கு கீழ் நின்றும் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு டூர் போகும் ஆசையைத் தூண்டி வருகிறார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து அசத்திய ஜெயம் ரவி 2வது பாகத்திலும் தன்னுடைய போர்ஷனை சிறப்பாக செய்துள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரிலும் ஜெயம் ரவியின்போர்ஷன் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











