பூஜை போட்ட வேகத்தில் ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்: அடுத்த படத்துக்கு ரெடியான ஜெயம் ரவி
சென்னை: 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
ஜெயம் ரவி தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி
'ஜெயம்' படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த ஜெயம் ரவி, ஆரம்பத்தில் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், ரீமேக் படங்களில் நடித்து வந்தார். அதன்பின்னர் முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். முக்கியமாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில், அருள்மொழி வர்மனாக நடித்து பிரமிக்க வைத்துள்ளார்.

எம். ராஜேஷுடன் புதிய கூட்டணி
ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன், அகிலன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இதனைத் தொடர்ந்து இயக்குநர் எம். ராஜேஷுடன் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ளார் ஜெயம் ரவி. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என காமெடி ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த எம். ராஜேஷுடன் ஜெயம் ரவி இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி 30 ஸ்பெஷல் அப்டேட்
ஜெயம் ரவியின் 30வது படமாக உருவாகி வரும் இதற்கு இன்னும் டைட்டில் கன்ஃபாம் ஆகவில்லை. இந்தப் படத்தின் பூஜை ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெற்றதுடன், முதற்கட்ட படப்பிடிப்பை ஊட்டியில் தொடங்கியது படக்குழு. இதனிடையே நடிகை பூமிகாவும் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் இருவரும் பங்கேற்ற முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து படக்குழு மீண்டும் சென்னை திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த படத்திற்கு தயாரான ஜெயம் ரவி
ஜெயம் ரவி, எம். ராஜேஷ் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜெயம் ரவி அடுத்து ஆண்டனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், சீக்கிரமே பூஜையுடன் படப்பிடிப்புத் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அஹமத் இயக்கும் படத்திலும் பிஸியாக இருக்கிறார் ஜெயம் ரவி.


Click it and Unblock the Notifications











