Iraivan Day 2 collection: அய்யய்யோ என்ன இப்படி ஆகி போச்சு... பாக்ஸ் ஆபிசில் சொதப்பிய இறைவன்!
சென்னை: ஜெயரம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த இறைவன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இறைவன்.

சைக்கோ மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஜெயம் ரவியின் இறைவன்: தனி ஒருவன் படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இப்படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார்.
படத்தின் கதை: மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான். அவனை காவல்துறை அதிகாரியான ஜெயம் ரவி எப்படி பிடிக்கிறார்... கொலைக்கான காரணம் என்ன என்பது தான் படத்தின் கதை. அண்மையில் வெளியான போர்த்தொழில் படத்தைப் போன்று இறைவன் படத்தின் கதைக்களம் இருப்பதால், படத்தை ரசிக்க முடியவில்லை. சென்டிமென்ட் சீன் மனதில் ஒட்டவில்லை, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த போதும், பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை.

ஏ சான்றிதழ்: அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் சில மோசமான காட்சிகள் மற்றும் கெட்டவார்த்தைகள் இடம் பெற்று இருப்பதால்,இப்படத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதனால், ஜெயம் ரவியே குழந்தைகளை அழைத்துக்கொண்டு படத்திற்கு வரவேண்டாம் என படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார். தற்போது காலாண்டு விடுமுறையில் குழந்தைகள் இருப்பதால் பெற்றோர்களின் முதல் சாய்சாக சந்திரமுகி 2 திரைப்படம் உள்ளது.
இரண்டாம் நாள் வசூல்: இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான இறைவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் சொதப்பியுள்ளது. முதல் நாளில் இப்படம் ரூ. 2.50 கோடியில் இருந்து ரூ. 3 கோடி வரையில் மட்டுமே வசூலித்துள்ளதாகவும், இரண்டாம் நாள் வசூல் வெறும் ரூ 1.75 கோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படக்குழு வேதனையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











