Jayam Ravi: தனுஷின் பெஸ்ட்டியுடன் ஜெயம் ரவி ரொமான்ஸ்... அசத்தும் காதலிக்க நேரமில்லை ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: கோலிவுட்டின் சாக்லெட் ஹீரோவாக கலக்கி வருகிறார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

 Jayam Ravi: Jayam Ravi and Nithya Menon starrer Kadhalikka Neramillai First Look Released

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி.

அதனைத் தொடர்ந்து தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜெயம் ரவி.

காதலிக்க நேரமில்லை ஃபர்ஸ்ட் லுக்
பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் ஜெயம் ரவி. அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அதனைத் தொடர்ந்து வெளியான அகிலன், இறைவன் படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. ஆனாலும், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

எம் ராஜேஷ் இயக்கும் ப்ரதர்ஸ், சைரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதேபோல், கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் ஜெயம் ரவி லீடிங் ரோலில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜீனி படத்திலும் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். அதேபோல், தனி ஒருவன் 2ம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளது.

இநிலையில், கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருந்தார் ஜெயம் ரவி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து தற்போது அபிஸியலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருத்திகா உதயநிதி நடிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை’ என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன், தக் லைஃப், ஜீனி வரிசையில் காதலிக்க நேரமில்லை படத்திலும் ஏஆர் ரஹ்மானுடன் இணைகிறார் ஜெயம் ரவி. அதேபோல், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறாராம். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் பெஸ்ட்டியாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்திருந்தார் நித்யா மேனன். இப்போது ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியாகிவிட்டார்.

அதன்படி தற்போது வெளியான காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஜெயம் ரவியும் நித்யா மேனனும் செம்ம ரொமாண்டிக்கலாக போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் யோகி பாபு, லால், வினய், ஜான் கொக்கேன் ஆகியோரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. காதலிக்க நேரமில்லை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி, இந்த முறை மெகா டீமுடன் களமிறங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X