விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம்.. தனிமையில் ஜெயம் ரவி இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?..

சென்னை: ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் கூடிய விரைவில் பிரியப் போகின்றனர் என்றெல்லாம் விவாகரத்து சர்ச்சைகள் ஒரு பக்கம் எழுந்துக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் அதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதை போல ஜெயம் ரவியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார் ஆர்த்தி. பெரிய அளவில் பிரச்சனை வெடித்தாலும், அதுபற்றி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இரு தரப்பும் அமைதியாகவே அந்த விவகாரத்தை கடந்து விட்டனர்.

Jayam Ravi Brother Goa

நடிகர் ஜெயம் ரவி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாதமாகவே அவர் தனிமையில் ஜாலி டூர் அடித்து வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகி ஷாக்கை கிளப்பியுள்ளன.

சிவகார்த்திகேயனுடன் மோதல்: இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்குப் போட்டியாக பிரதர் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல் எனும் ஃபிளாப் படத்தை கொடுத்த ராஜேஷ். எம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Jayam Ravi Brother Goa

மணிரத்னம் படத்துக்கு நோ: மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும் டைட்டில் ரோலில் நடித்த ஜெயம் ரவி கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் கமிட் ஆனார். ஆனால், அந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் வெளியேறி சிம்பு உள்ளே வந்ததும் ஜெயம் ரவியும் விலகி விட்டதாக கூறப்பட்டது. மற்ற படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக வெளியேறியதாக ஜெயம் ரவி தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து சர்ச்சை: 2009ம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்துக் கொண்ட ஜெயம் ரவி தொடர்ந்து மனைவியின் அம்மா தயாரிப்பில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான சைரன் திரைப்படத்தையும் ஜெயம் ரவியின் மாமியார் தான் தயாரித்து இருந்தார். இந்நிலையில், திடீரென ஜெயம் ரவியும் ஆர்த்தியும் பிரியப் போவதாக சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், இருவரும் அமைதியாகவே இருந்து வதந்திக்கு விளக்கம் கொடுக்க தேவையில்லை என விஜய் பாணியில் அதனை கடந்து விட்டதாகவே சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

கோவாவில் ஜெயம் ரவி: பிரதர் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறாரா என்று பார்த்தால் கடந்த ஒரு மாதமாக ஜெயம் ரவி எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் கோவாவுக்கு டூர் சென்று தனிமையில் இனிமை காண்பதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. பரபரப்பான ஹீரோ ஜெயம் ரவி திடீரென கோவாவுக்கு டூர் சென்றுள்ள நிலையில், குடும்பத்துடன் சென்றுள்ளாரா? அல்லது தனியாக சென்று இருக்கிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X