Jayam Ravi - மனைவியை பிரிந்த ஜெயம் ரவி... இன்று பிறந்தநாள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவரது இயக்கத்தில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க அவர் தனது மனைவியை பிரிவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஷாக் கொடுத்தார். இந்நிலையில் இன்று அவர் தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவரது தந்தை எடிட்டர் மோகன். அவர் வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். ஒருவழியாக தனது வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு தனது இரண்டு மகன்களையும் சினிமாவுக்கு கொண்டு வந்தார். அதன்படி மூத்த மகன் ராஜா இயக்குநர். இளைய மகன் ரவி நடிகர். ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ரவிக்கு முதல் படமே ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும் முதல் படத்திலேயே தன்னுடைய திறமையையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார் ரவி.

ஃபுல் பார்மில் ரவி: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்த எம்.குமரன் S/O மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம் பேராண்மை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். முக்கியமாக சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்த ரவிக்கு பேராண்மை திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்து அவரை ஆக்ஷன் ஹீரோவாகவும் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.
திருமணம்: இதற்கிடையே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே ஆர்த்தி என்பவரை காதலித்துவந்தார் ரவி. இருவரது திருமணமும் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்தது. முதலில் இந்தத் திருமணத்தில் ரவியின் வீட்டுக்கு இஷ்டமில்லை என்றும்; ஆனால் ஆர்த்தியை திருமணம் செய்துகொள்வதில் ரவி உறுதியாக இருந்ததன் காரணமாக ரவியின் வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. ரவி -ஆர்த்திக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.
பிரிவு: இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்களுக்குள் பிரச்னை ஆரம்பித்தது. அதற்கு காரணம் ஆர்த்தியின் அம்மாதான் என்றும்; அவர் ரவியை வைத்து தயாரித்த படங்கள் தோல்வியடைந்ததால் சிறியதாக இருந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்தச் சூழலில் தனது மனைவியை பிரிவதாக நேற்று ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஷாக் கொடுத்தார்.
இன்று பிறந்தநாள்: அவரது இந்த முடிவு திரைத்துறையினரிடமும் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கிறது. அதிலும் இன்று அவர் தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரே என்று பலரும் பேசிவருகிறார்கள். இந்நிலையில் ரவியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் ரவியின் மொத்த சொத்து மதிப்பு 75லிருந்து 80 கோடி ரூபாய்வரை இருக்கும் என்றும்; சில தொழில்களில் அவர் முதலீடு செய்து அதன் மூலமும் வருவாய் ஈட்டுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஆடி கார் வைத்திருக்கும் அவர் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை சொந்தமாக வைத்திருப்பதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











