இசை ரசிகர்களுக்கு ட்ரீட்! ஜெயம் ரவியின் பிரதர் பட பாடல்களை லைவாக ரிலீஸ் செய்யும் ஹாரீஸ் மாம்ஸ்?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இன்றுடன் அதாவது 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதியுடன் 21 ஆண்டுகள் ஆகின்றது. இவர் நடிப்பில் வெளியான ஜெயம் படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே ரவிக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டைப் பெற்றுக் கொடுத்ததால் நகரங்கள் மட்டும் இல்லாமல் கிராமங்களிலும் ஜெயம் ரவி நன்கு ரீச் ஆனார். அதன் பின்னர் மக்களுக்கு ஃபீல் குட் படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கதைத் தேர்வுகளில் மிகவும் கவனமாக செயல்பட்டார்.
இதனால் இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவோ அல்லது சுமாராக ஓடிய படங்களாகவோதான் இருந்தது. ஒருகட்டத்திற்கு மேல் ஆக்ஷன் படங்களில் ஜெயம் ரவி கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்படியான படங்களும் சில கைகொடுக்க, ஆக்ஷன் ஹீரோவாகவும் ஜெயம் ரவி வலம் வருகின்றார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, அதன் பின்னர் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் எம். ராஜேஸ். இவரது இயக்கத்தில் வெளியான பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் எல்லாம் எவர் க்ரீன் லிஸ்ட்டில் இருக்ககூடிய படங்களாக உள்ளன.

பிரதர் படம்: இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படமாக பிரதர் படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நட்டி, பூமிகா, சீதா, அச்யுத், 'பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

ஆகஸ்ட் ரிலீஸ்? இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று சினிமா வட்டாரத்தில் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாதத்தில் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளாதாகவும், இசை வெளியீட்டு விழாவில் ஹாரீஸ் ஜெயராஜ் லைவாக இசைக்கச்சேரி நடத்தி பாடல்களை ரிலீஸ் செய்யவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

படம் குறித்து ராஜேஸ்: ஏற்கனவே ஆகஸ்ட் 15இல் பல படங்கள் ரிலீஸாகவுள்ளது என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், பிரதர் படம் ஆகஸ்ட் மாதத்தில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதேபோல் பிரதர் படம் குறித்து படத்தின் இயக்குநர் எம். ராஜேஸ், " ஆக்ஷன் திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்து முத்திரை பதித்து வந்தாலும் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற குடும்பப்பாங்கான திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. அந்த வரிசையில் பிரதர் இணையும் என்பதில் சந்தேகம் இல்லை" எனக் கூறியிருந்தார்.



Click it and Unblock the Notifications











