Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!
போகன் படம் வெளியான முதல் நாளே, அதன் வெற்றியை கமலா திரையரங்கில் கேக் வெட்டிக் கொண்டாடினார் ஜெயம் ரவியும், படக் குழுவினரும்.
அடுத்தடுத்து படங்களை தயாரித்து வெளியிட்டு வெற்றியை ருசித்து வருகிறார் பிரபுதேவா. அவர் சமீபத்தில் நடித்து, தயாரித்து வெளியிட்ட 'தேவி' வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே வெற்றிதான்.
இப்போது பிரபுதேவா தயாரித்துள்ள படம் "போகன்.' 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லஷ்மண், ஜெயம் ரவி, ஹன்சிகா கூட்டணி இப்படத்திலும் இணைந்துள்ளது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார் அரவிந்த் சாமி.
போகன் படம் நேற்று வெளியானது. முதல் நாளன்றே இதன் வெற்றிவிழாக் கொண்டாட்டம் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. திரையின் முன்பு படக் குழுவுடன் இணைந்து கேக் வெட்டினார் ஜெயம் ரவி. பிறகு படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
"படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் படத்தின் வெற்றி முதல் காட்சி முடிந்த போதே தெரிந்து விடுகிறது. அந்த வகையில் போகன் பெரும் வெற்றி பெற்றுள்ளது," என்றார் ஜெயம் ரவி.