நிமிர்ந்து நில் இனி வீரநடை போடும்... ஜெயம் ரவி நம்பிக்கை
சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள நிமிர்ந்து நில் படம் நிச்சயம் வீரநடை போட்டு வெற்றிகளை குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அப்படத்தின் நாயகனான ஜெயம் ரவி.
ஜெயம் ரவி-அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்ந்து நில்' படத்தை 'நாடோடிகள்' பட இயக்குநர் சமுத்திரகனி இயக்கியுள்ளார். இசை ஜீ.வி.பிரகாஷ். நேற்று முந்தினம் வெளியாக இருந்த இப்படம் ஒரு சில காரணங்களால் தாமதமாக நேற்று வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி படத்தை வெளியிட ஏற்பட்ட சிரமங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

சினிமாவுல இதெல்லாம் சகஜம்...
இது யாருக்குமே கடினமான ஒன்றுதான். எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் தங்கள் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களை வெளியிடும் சமயத்தில் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுவது சகஜம்.

முயற்சி...
நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். சிரமங்கள் கடினமாக செல்ல செல்ல நாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

நன்றி...
இந்த கடினமான சூழ்நிலையில் நான் என்னுடைய நண்பர்கள், திரைத்துறை கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.

வீரநடை ...
‘நிமிர்ந்து நில்' இனி வீரநடை போடும்' என இவ்வாறு ஜெயம் ரவி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











