ஆரவ் ஹீரோவாகும் படத்தை நான் தான் இயக்குவேன்: ஜெயம் ரவி

மகனின் படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Recommended Video

டிக் டிக் டிக் வெற்றி விழா-ஜெயம் ரவி பேச்சு-வீடியோ

சென்னை: தன் மகனின் முதல் படத்தை தான் தான் இயக்குவேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

சக்கி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'டிக் டிக் டிக்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடினர்.

Jayam Ravi to direct his son

இந்த கொண்டாட்டத்தில், ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் மோகன் ராஜா, படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் மதன் கார்கி மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "டிக் டிக் டிக் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எங்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருந்தது. அது வீண்போகவில்லை.

Jayam Ravi to direct his son

இந்த பட வெற்றியின் மூலம், இனி இதுபோன்ற முயற்சிகளை தைரியமாக எடுக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதற்காக இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜனை பாராட்டுகிறேன்.

எனக்கும் என் மகனுக்காகவும் குறும்பா பாடலை கொடுத்த இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்கி ஆகியோருக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பெற்றிருக்கிறேன். குறும்பா பாடலை இதுவரை நான் 2 ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருப்பேன்.

என் மகன் தொடர்ந்து நடிப்பானா என எனக்கு தெரியாது. ஆனால் அவன் ஹீரோவாகும் படத்தை நான் தான் இயக்குவேன். எனவே ராஜா அண்ணன் என்னை மன்னிக்க வேண்டும். என் அண்ணன் இல்லாமல் நான் இங்கு இல்லை", இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X