பாடகியுடன் தொடர்பா? உன் கஷ்டத்திற்கு நான் பொறுப்பு இல்ல.. ஆர்த்திக்கு பதிலடி கொடுத்த கெனிஷா!
சென்னை: 15 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்ந்த ஜெயம் ரவி, ஆர்த்தியின் குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல் அடித்து வருகிறது. இத்தனை நாட்களாக ஆர்த்தி தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஜெயம் ரவி, பாடகி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தான், இந்த விவாகரத்திற்கு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷாவும் கோவாவில் இருந்த போது காரை வேகமாக ஓட்டியதற்காக டிராபிக் போலீசிடம் மாட்டி அதற்கு அபராதம் கட்டியதற்கான ரசீதும், அது சென்னையில் ஜெயம் ரவி ஓட்டிவந்த கார் என்றும் சொல்லப்பட்டது. மேலும், பாடகி கெனிஷாவின் அனுமதி இல்லாமல் ஜெயம் ரவியை பார்க்கவே முடியவில்லை என ஆர்த்தி புலம்பியதாக பல தகவல்கள் வெளிவந்தன.

ஜெயம் ரவி பேட்டி: இதையடுத்து, நேற்று எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ப்ரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, நான் எடுத்த விவாகரத்துத் முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். இதுகுறித்து அவரின் அப்பா என் பெற்றோரிடம் பேசினார். என் மூத்த மகனிடம் இதுகுறித்து பேசினேன். அவன், மற்ற குழந்தைகளை போல, இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான்.
யாராலும் தடுக்க முடியாது: வாழு... வாழ விடு. யாரையும் இதில் இழுக்காதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள். பாடகி கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களை காப்பாற்றிய ஒரு ஹீலர் அவர். எதிர்காலத்தில் நானும், கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டர் தொடங்கி பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது என்று கோவமாக பேசி இருந்தார்.

பாடகி கெனிஷா: இதுநாள் வரைக்கும் எதுவுமே பேசாமல் இருந்த பாடகி கெனிஷா பிரான்சிஸ், ஜெயம் ரவியின் பேட்டிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், என்னமாதியான கேள்வி எல்லாம் கேட்டீங்க, உங்களுக்கு கொஞ்சமாவது நாகரீகம் இருக்கா, இப்போ பாருங்க ஜெயம் ரவி என்ன மாதிரியான பதிலடி கொடுத்து இருக்கிறார். இனிமேலாவது உங்க மனசை அமைதியா வெச்சிக்கோங்க, ஏன் என்றால், உங்க மனதில் இருக்கும் காயத்திற்கு உங்க எதிரி காரணம் இல்லை. நீங்க ஒருத்தர நேசிப்பதாக சொல்லிக்கிட்டு இருந்தீங்களே அவரால் ஏற்பட்டது தான் என்று, ஆர்த்தி ரவிக்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார்.
இதற்கு இணையவாசி ஒருவர், உங்க கட்டுப்பாட்டில் ஜெயம் ரவி பாதுகாப்பா இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கெனிஷா, நீ பாதுகாப்பா இருக்கீயா, உன் நண்பர்கள் பாதுகாப்பா இருக்காங்களா, உன்னால உன் நண்பர்கள் பாதுகாப்பா இருக்காங்களா என்று பாரு என அந்த நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











