Jayam Ravi: ஒரே நேரத்துல ரெண்டு.. ஜெயம் ரவி போட்ட போஸ்ட்.. வெளுத்து வாங்கிய மனைவி ஆர்த்தி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன் படம் படுதோல்வியை சந்தித்தாலும், அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் சைரன், ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்த்துக் கொண்டே அவர் பதிவிட்ட பதிவும் அதற்கு அவரது மனைவி போட்ட கமெண்ட்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Jayam Ravi eating two ice creams but his wife Aarti Ravi warns

பொன்னியின் செல்வன்: கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி தமிழ் சினிமாவுக்கு 500 கோடி வசூல் வேட்டையை பெற்றுத் தந்தது. மேலும், இந்த ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் 300 கோடி வசூலை ஈட்டி ஒட்டுமொத்தமாக வெறும் 150 நாட்களில் உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் சேர்த்து 800 கோடி அளவுக்கு வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் முதல் மகேஷ் பாபு வரை நடிக்க வேண்டிய அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

அகிலன், இறைவன் சொதப்பல்: மல்டி ஸ்டார் படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் வசூல் வேட்டையை நடத்தினாலும் ஜெயம் ரவி சோலோவாக நடித்து வெளியான அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட 2 படங்களும் அட்டு ஃபிளாப் படங்களாக மாறின.

Jayam Ravi eating two ice creams but his wife Aarti Ravi warns

அதன் காரணமாக ஜெயம் ரவிக்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. அடுத்து ஜெயம் ரவி நடித்து வரும் சைரன், ஜீனி, பிரதர் மற்றும் தனி ஒருவன் 2 படங்கள் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஜொலிக்க போகிறது என்பதை பொறுத்து தான் ஜெயம் ரவிக்கு வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு: இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ரொம்பவே டென்ஷனான ஒன்று தான் என பதிவிட்டு ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்க்ரீம்களை குழந்தை போல சாப்பிடும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜெயம் ரவி.

கண்டித்த மனைவி: ஐஸ்க்ரீம்களை சாப்பிட இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஒரு எக்ஸ்க்யூஸ் என உடனடியாக கமெண்ட் பக்கத்தில் ஜெயம் ரவியின் அன்பான மனைவி ஆர்த்தி ரவி கண்டித்துள்ளார். இருவரது இந்த ஆன்லைன் சாட் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X