ரோமியோ - ஜூலியட்: ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா டூயட்!

By Shankar

ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பாஜ்வா நடிக்கின்றனர்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ரோமியோ ஜூலியட் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி - பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இமான்

இமான்

டி இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் லக்ஷ்மன்.

இந்தப் படத்திற்காக மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

ஜெயம் ரவி- ஹன்சிகா- பூனம்

ஜெயம் ரவி- ஹன்சிகா- பூனம்

"ரோமியோ ரோமியோ ஜூலியட் ரோமியோ" என்ற பாடல்காட்சியில் ஜெயம்ரவி - ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா பங்கேற்றனர். மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுக்கு இமான் இசையமைத்த இந்த பாடல் காட்சி மிகப் பிரமாண்டமான முறையில் படமாகப் பட்டுள்ளது.

மும்பை பாடகர்

மும்பை பாடகர்

இதில் நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு டான்சர்கள் பங்கேற்றனர். இந்த பாடலை மும்பையின் பிரபல பாடகரான விஷால் தட்லாணி பாடி இருக்கிறார்.

வாழ்க்கையை வீணாக்கப் பொறந்தவளே..

வாழ்க்கையை வீணாக்கப் பொறந்தவளே..

அத்துடன் 'அடியே அடியே - என் வாழ்கையை வீணாக்க பொறந்தவளே' என்ற பாடல் காட்சியில் ஜெயம்ரவி - ஹன்சிகா பங்கேற்க சென்னை அருகே துறைமுகம், காசிமேடு மற்றும் விமான நிலையம் போன்ற இடங்களில் நடைபெற்றது.

பிரமாண்ட படம்

பிரமாண்ட படம்

மிக பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தை தயாரிக்கும் எஸ்.நந்தகோபால் கூறுகையில், "ஜாலியான படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது. படம் குறித்து சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது," என்றார்.

படத்தின் டப்பிங்கின்போது சில காட்சிகளைப் பார்த்த பிரபலங்கள், படத்தைப் பற்றி ரொம்ப பாஸிடிவாக பேச ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X