Jayam Ravi Salary: பொன்னியின் செல்வன் 2.. சம்பளத்தை சட்டென உயர்த்திய ஜெயம் ரவி.. சக நடிகர்கள் ஷாக்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து தனித்துவமான கதைகளில் நடித்து மினிமம் கியாரண்டி வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக டைட்டில் ரோலில் நடித்த நிலையில், ஜெயம் ரவியின் ஹைப் உலகளவில் அவருக்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்துள்ளது.

இந்நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த படங்களுக்கு ஜெயம் ரவி உயர்த்தி உள்ள சம்பளம் குறித்த தகவல்கள் சக நடிகர்களையே ஷாக் ஆக்கி உள்ளன.

சூப்பர் கூல் ஹீரோ

சூப்பர் கூல் ஹீரோ

அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் அறிமுகமான ஜெயம் ரவிக்கு இதுவரை வெற்றிகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடித்து ஓடாத படங்கள் என்றால் ரொம்பவே விரல் விட்டு எண்ணி சொல்லி விடலாம். அந்த அளவுக்கு மினிமம் கியாரண்டி ஹீரோவாகவே சினிமாவில் கலக்கி வருகிறார். மேலும், தனி ஒருவன் போன்ற பெரிய வெற்றியை கொடுத்தாலும் பந்தா பண்ணாமல் சூப்பர் கூல் ஹீரோவாகவே பொன்னியின் செல்வன் முடித்த நிலையிலும் அவர் வலம் வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராஜ ராஜ சோழன்

ராஜ ராஜ சோழன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்த ஜெயம் ரவியின் நடிப்பை இரண்டாம் பாகத்திலும் வரும் ஏப்ரல் 28ம் தேதி காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும், ஜெயம் ரவி தனியாக ராஜ ராஜ சோழன் என்கிற டைட்டிலிலேயே ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 சம்பளம்

பொன்னியின் செல்வன் 2 சம்பளம்

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் மட்டும் நடிக்க ஜெயம் ரவிக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 500 கோடிக்கும் மேல் முதல் பாகத்தின் வசூல் குவிந்த நிலையில், இரண்டாம் பாகமும் பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளத்தை அதிகரித்த ஜெயம் ரவி

சம்பளத்தை அதிகரித்த ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் 2 படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அகமது இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து இறைவன், டாப்ஸி உடன் ஜன கண மண மற்றும் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், வேல்ஸ் நிறுவனம் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள புதிய படத்துக்கு ஜெயம் ரவியின் சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளதாக அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளன.

செம சைலன்ட்டாக

செம சைலன்ட்டாக

லேசான புன்னகையுடன் செம சைலன்ட்டாக பெரிய போட்டி நடிகராக எல்லாம் காட்டிக் கொள்ளாமல் எளிமையாகவே நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து கெத்துக் காட்டி வருகிறார் ஜெயம் ரவி. கோமாளி, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் ஜெயம் ரவி விரைவில் அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X