Jayam Ravi Salary: இனிமேலும் மாமியார் தயவு தேவையில்லை.. ஜெட் வேகத்தில் எகிறிய ஜெயம் ரவி சம்பளம்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் நடித்து வருகிறார் என்கிற பேச்சுக்களில் இருந்து இனிமேல் முற்றிலுமாக மீண்டு விடுவார் எனக் கூறுகின்றனர். கடைசியாக ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி நடிப்பில் வெளியான சைரன் 108 திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தான் தயாரித்திருந்தார்.

அந்த படம் தோல்வியை தழுவியதில் இருந்து தான் பிரச்சனை வெடித்ததாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்டுள்ள நட்பை ஆர்த்தி ரவி தவறுதலாக புரிந்துக் கொண்டு சண்டை போட்டது தான் அவரை ஜெயம் ரவி பிரியக் காரணம் என்றும் கூறுகின்றனர்.

jayam ravi salary kadhalikka neramillai

ஜெயம் ரவியின் விவாகரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஜெயம் ரவியின் மார்க்கெட் முற்றிலுமாக சரிந்து விடும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அதெல்லாம் இல்லை பாஸ் அவருடைய சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்து விட்டது என புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

வரிசையாக 3 படங்கள்: ஜெயம் ரவி கைவசம் தற்போது வரிசையாக 3 படங்கள் ரிலீஸ் நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். சினிமாவில் தான் இனிமேல் முழு கவனத்தையும் ஜெயம் ரவி செலுத்தப் போகிறார் என்றும் குடும்பத்தில் கவனம் வைக்க மாட்டார் என்றும் கூறுகின்றனர். வரும் தீபாவளிக்கு ராஜேஷ். எம் இயக்கத்தில் பிரியங்கா மோகன் உடன் இணைந்து ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தைத் தொடர்ந்து காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

jayam ravi salary kadhalikka neramillai

தனி ஒருவன் 2: இந்த மூன்று படங்களை முடித்து விட்ட பின்னர் மீண்டும் அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது. நயன்தாரா மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து அந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து வெயிட்டான படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ள நிலையில், அவருடைய சம்பளத்தையும் அவர் அதிகரித்து விட்டதாக கூறுகின்றனர்.

ஜெயம் ரவி சம்பளம் இத்தனை கோடியா?: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியை டார்கெட் செய்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிரதர் படம் வெற்றி பெற்று விட்டால் ஜெயம் ரவி தனது சம்பளத்தை 25 கோடி முதல் 30 கோடி வரை உயர்த்த ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர்.

jayam ravi salary kadhalikka neramillai

ஹீலிங் தெரபி சென்டர்ஸ்: தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் உடன் இணைந்து ஹீலிங் தெரபி சென்டர்களிலும் முதலீடு செய்ய ஜெயம் ரவி மும்முரம் காட்டி வருவதாக கூறுகின்றனர். ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிய முடிவு செய்து விட்டார் என்றும் சமரசம் பேச யார் வந்தாலும் சரிப்பட்டு வராது என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X