யானையின் காதில் பேசிய ஜெயம் ரவி.. கூல் பண்றதுக்கு என்னல்லாம் செஞ்சிருக்காரு!

சென்னை :பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தப் படத்தின் ட்ரெயிலரை 5 மொழிகளில் 5 முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது.

சில மணி நேரங்களிலேயே இந்த ட்ரெயிலர் யூடியூபில் 3 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 1

பொன்னியின் செல்வன் பாகம் 1

நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம். இந்தப் படம் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டுத் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

பிரம்மாண்டமான இசை வெளியீடு

பிரம்மாண்டமான இசை வெளியீடு

முன்னதாக படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பிரம்மாண்டமான வகையில் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நடத்தப்பட்டது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் கலக்கலாக கலந்து கொண்டனர்.

ஏஆர் ரஹ்மான் மிரட்டல் இசை

ஏஆர் ரஹ்மான் மிரட்டல் இசை

ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் 6 பாடல்கள் வெளியிடப்பட்டன. அனைத்துப் பாடல்களும் பிரம்மாண்டத்தின் உச்சமாக காணப்பட்டது. இந்தப் பாடல்களின் இசைக் கோர்வைக்காக ஏஆர் ரஹ்மான் பண்டைய காலத்தில் பயன்டுத்தப்பட்ட பழமையான இசைக்கருவிகளை கண்டறிந்து தன்னுடைய இசையில் சேர்த்ததாக தெரிவித்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்கள்

அவருடைய அந்த உழைப்பின் பலன் இந்த பாடல்களில் வெளிப்பட்டது. இதனூடாகவே படத்தின் மிரட்டலான ட்ரெயிலரும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட கமல் மற்றும் ரஜினி இந்த ட்ரெயிலரை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் இருவரும் மேடையில் பேசிய பேச்சு மிகவும் அழகாக இருந்தது.

தந்தையின் பாராட்டு

தந்தையின் பாராட்டு

இதனிடையே மேடையில் ஜெயம் ரவியும் பேசினார். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படத்தில், மணிரத்னம் இயக்கத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சின்ன வயதில் பொன்னியின் செல்வன் தொடரை படிப்பதற்காக ஆழ்பேட்டைக்கு சைக்கிளில் சென்று வாங்கியதை அவருடைய தந்தை எடிட்டர் மோகன் நினைவுக்கூர்ந்ததையும் குறிப்பிட்டார்.

பிரம்மாண்டமான படம்

பிரம்மாண்டமான படம்

சந்திரலேகா படத்திற்கு பிறகு தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா இந்தப் படத்தில் தனது சகோதரி குந்தவையாக நடித்துள்ளதையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார்.

மணிரத்னத்திடம் திட்டுவாங்கிய ஜெயம்ரவி

மணிரத்னத்திடம் திட்டுவாங்கிய ஜெயம்ரவி

ஒருமுறை தான் கீழே குனிந்துக் கொண்டு டயலாக் பேசியபோது, பெரிய சாம்ராஜ்யத்தை சேர்ந்த இளவரசன் அருள்மொழிவர்மன், கம்பீரமானவன் அவன் கீழே குனிந்து நடக்க மாட்டான், இனி இப்படி செய்யாதே என்று மணிரத்னம் தன்னை திட்டிய நிகழ்வையும் ஜெயம் ரவி நினைவுக் கூர்ந்துள்ளார்.

யானை காதில் ரகசியம்

யானை காதில் ரகசியம்

மேலும் யானை சம்பந்தப்பட்ட ஒரு சீனில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்ததாகவும் அதற்கு மற்றவர்கள், அதன் காதில் எதையாவது சொல் அது நெருக்கமாகிவிடும என்று ஆலோசனைக் கூறியதாகவும் அதன்படி தான் யானையின் காதில் படத்தின் சூட்டிங் சீக்கிரமாக முடிய வேண்டும் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X