Jayam Ravi: பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ரூட்டை மாற்றிய ஜெயம் ரவி... இதெல்லாம் செட் ஆகுமா சாரே!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தப் பிறகு ஜெயம் ரவி ரொம்பவே பிஸியாகிவிட்டார்.

அருள்மொழி வர்மன் கேரக்டர் கொடுத்த கம்பேக் அடுத்தடுத்து பல இயக்குநர்கள் ஜெயம் ரவியை சந்தித்து கதை கூறி வருகின்றனர்.

தற்போது இறைவன், ஜன கண மன, சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக ஜெயம் ரவி முதன்முறையாக புதிய கூட்டணியில் வித்தியாசமான கதையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jayam Ravi is reportedly going to be teaming up with director Ponram

ரூட்டை மாற்றிய ஜெயம் ரவி: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த படம் ஜெயம் ரவி கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. முக்கியமாக கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பொன்னியின் செல்வனை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

முன்னதாக ஏற்கனவே கமிட் ஆகியிருந்த இறைவன், ஜன கண மன, சைரன் படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதன் பின்னர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை பொன்ராம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இன்னொரு படத்தை முத்தையா இயக்கவுள்ளாராம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பொன்ராம். சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் காமெடி ஜானரில் உருவானது. இதேபோல், மற்ற படங்களும் கிராமத்து கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் கடைசியாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த டிஎஸ்பி எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

 Jayam Ravi Is Reportedly Will Be Teaming Up With Director Ponram

இதனையடுத்து தற்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி வைக்க பொன்ராம் முடிவு செய்துள்ளாராம். இந்தப் படமும் பொன்ராம் ஸ்டைலில் வில்லேஜ் ஜானரில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராமத்துப் பின்னணியில் அதிகம் நடித்திடாத ஜெயம் ரவி, பொன்னியின் செல்வனுக்குப் பிறகு தனது ரூட்டை மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நல்ல கதைகள் அமைந்தால் பொன்ராம் போன்ற இயக்குநர்களுடன் இணைய முடிவு செய்துள்ளாராம்.

பொன்ராம் மட்டுமின்றி முத்தையா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் ஜெயம் ரவி திட்டமிட்டுள்ளாராம். இந்தப் படம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதனால், அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜெயம் ரவி வில்லேஜ் ஹீரோவாக மாஸ் காட்டப் போகிறாராம். அதேநேரம் தனி ஒருவன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்து வந்த ஜெயம் ரவி, வில்லேஜ் கேரக்டரில் எப்படி மிரட்டப் போகிறார் என ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X