Jayam Ravi: லோகேஷ் கதை சொன்னது உண்மைதான்... லியோ பத்தி எதுவும் சொல்ல முடியாது... ஜெயம் ரவி ட்விஸ்ட்

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

சைக்கோ த்ரில்லர் ஜானரில் மிரட்டலாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இறைவன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஜெயம் ரவியும் இயக்குநர் அஹமதுவும் கலந்துகொண்டனர்.

அப்போது லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையும் படம், விஜய்யின் லியோ ஆகியவை குறித்து ஜெயம் ரவி மனம் திறந்தார்.

 Jayam Ravi: Jayam Ravi opens up about Lokesh and Leo update

லியோ அப்டேட் சொல்ல முடியாது: ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான 'ஜெயம்' ரவி, தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். தனி ஒருவன் படத்திற்குப் பின்னர், பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி கேரியரை மாற்றியமைத்துள்ளது. இதனையடுத்து கமலின் 234வது படம், தனி ஒருவன் 2, ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படம் என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை அஹமத் இயக்கியுள்ளார். மிரட்டலான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இறைவன், ஜெயம் ரவிக்கு இன்னொரு மாஸ் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஜெயம் ரவியும் இயக்குநர் அஹமதுவும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ் குறித்து மனம் திறந்தார். சில தினங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி - லோகேஷ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், விரைவில் ஜெயம் ரவி - லோகேஷ் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதுபற்றிய உண்மைகளை மனம் திறந்துள்ளார் ஜெயம் ரவி.

அதாவது, லோகேஷ் கனகராஜ் தனக்கு கதை சொன்னது உண்மை தான் என்றும், ஆனால் அது இப்போது நடந்தது அல்ல. சில வருடங்களுக்கு முன்பு லோகேஷ் தன்னிடம் ஒரு கதை சொன்னதாகக் கூறியுள்ளார். ஆனால், அது அப்போது முடியாமல் போனதாகவும், விரைவில் லோகேஷுடன் இணையலாம் எனவும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் லோகேஷ் சிறந்த இயக்குநர் எனவும் அவரை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் விஜய் பற்றியும் அவர் நடித்துள்ள லியோ குறித்தும் உங்களுக்கு ஏதாவது அப்டேட் தெரியுமா என ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, "அது தொழில் தர்மம் கிடையாது, அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது" என கூறிவிட்டார். இதனிடையே இறைவன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், லோகேஷுக்கு அழைப்பு கொடுத்தும் அவர் அதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X