Jayam Ravi: ஜெயம் ரவிக்கு அடித்த பான் இந்தியா ஜாக்பாட்... 3 நாயகிகளுடன் தொடங்கியது Genie ஷூட்டிங்!

சென்னை: ஜெயம் ரவியின் 32வது பட அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து மிகப் பெரிய கம்பேக் கொடுத்தார் ஜெயம் ரவி.

இதனால், ஜெயம் ரவிக்கு புதிய படங்களில் நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

 Jayam Ravi: Jayam Ravis Pan India Project Genie movie starts with pooja

இந்நிலையில், பொன்னியின் செல்வனை தொடர்ந்து இரண்டாவதாக ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி.

பிரம்மாண்டமாக தொடங்கிய ஜீனி:தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் படத்தில் எளிமையாக தொடங்கிய இவரது பயணம் தற்போது பொன்னியின் செல்வனில் ராஜராஜ சோழன் கேரக்டரில் நடிக்கும் அளவிற்கு உச்சம் கண்டுள்ளது. தனி ஒருவன் படத்திற்குப் பின்னர் பொன்னியின் செல்வன் மூலம் மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளார்.

இதனால், ஜெயம் ரவிக்கு மேலும் பல புதிய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதுவரை அவரது கேரியரில் இல்லாத வகையில் பிரம்மாண்டமான படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவியின் 32வது படமாக உருவாகும் இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தற்போது படக்குழு தரப்பில் இருந்து டைட்டில் அறிவிப்புடன் அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயம் ரவியின் 32வது படத்துக்கு 'ஜீனி' (Genie) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸின் 25வது படமான ஜீனி, பான் இந்தியா மொழிகளில் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்தப் படத்துக்கு இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் காம்போ மீண்டும் இணைகிறது.

 Jayam Ravi: Jayam Ravis Pan India Project Genie movie starts with pooja

அதேபோல், இப்படத்தில் மலையாளத்தில் இருந்து கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கில் இருந்து கிருத்தி ஷெட்டி, பாலிவுட்டில் இருந்து கபி வாமிகா மூவரும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஜீனி திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசை, 3 நாயகிகள், 100 கோடி பட்ஜெட், பான் இந்தியா படம் என இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது 'ஜீனி.'

இந்தப் படத்தை மிஷ்கினின் அசிஸ்டெண்ட் அர்ஜுனன் இயக்குகிறார். ஜீனி தான் இவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜீனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதனையடுத்து ஜெயம் ரவி என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X