Nithya Menen: முதலமைச்சர் மருமகளையே பயப்பட வைத்த நித்யா மேனன்.. இப்படியெல்லாம் நடந்துச்சா?
சென்னை: இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட படங்களில் பல படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வரிசை கட்டிக் கொண்டு உள்ளது. அஜித்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவில்லை என அறிவிப்பு வந்த கணத்தில் இருந்து பொங்கலை டார்கெட் செய்து பல படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள, காதலிக்க நேரமில்லை படமும் ஒன்று. இந்தப் படத்தினை ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் நடிகை நித்யா மேனன் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகை நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான வெகு சில நடிகைகளில் ஒருவர். கடந்த 2022ஆம் ஆண்டு இவர் நடிகர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

நிதியா மேனன் சினிமா உலகில் இருந்த கட்டமைப்புகளை உடைத்த நடிகையாக பார்க்கப்படுகின்றார். காரணம், இந்தியா சினிமா உலகில் நடிகை என்றால், 50 கிலோ எடையில், கதாநாயகனுடன் டூயட் பாட மெல்லிய உடலமைப்புடன் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. ஆனால் நித்யா மேனன் இந்த எழுதப்படாத விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை விடவும் அவற்றையெல்லம் உடைத்து தகர்த்தவர். வெயிட்டான கதாபாத்திரத்திற்கு ஏதுவான நடிகை வேண்டும் என்றால் கதாபாத்திரத்தின் பெயருக்குப் பக்கத்தில் நித்யா மேனன் பெயரை கதை எழுதும்போதே எழுதிவிடலாம்.
கிருத்திகா உதயநிதி: இவர் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி திடீரென அறிவிக்கப்பட்டதால், படத்தின் ப்ரோமோசன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் இயக்குநர் கிருத்திகா உயதநிதி நித்யா மேனன் குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நித்யா மேனன்: அதாவது, நிதியா மேனன் பேய் போன்று நடித்துத் தள்ளிவிடுவார். நாம் நினைத்தபடி அவர் நடிக்கவில்லை என்றால், பிரச்னை அவரிடம் இல்லை. நம்மிடம்தான் உள்ளது என புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரிடம் சரியாக விளக்கவில்லை என்பதன் விளைவுதான் அது. அதாவது, ஒரு காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நித்யா மேனனிடம் நான் ரீ டேக் கேட்கின்றேன் என்றால், முதலில் அவரிடம் நான் எனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்ல, என்னைத் தயார் படுத்திக் கொள்வேன்.
முதலமைச்சர் மருமகள்: நித்யா மேனன் அதிகம் மூன்று டேக்குகளுக்கு மேல் நடிக்க மாட்டார். அதையும் கடந்து, அவரிடம் ரீ டேக் கேட்கின்றோம் என்றால், அவர் உடனே, உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பார். அதனைச் சொல்ல முதலில் நான் எனக்குள் சொல்லி என்னை தயார் செய்துகொள்வேன்" எனக் கூறியுள்ளார். கிருத்திகா உதயநிதியின் இந்தப் பேச்சைக் கேட்ட இணையவாசிகள், நித்யா மேனன் மிகவும் பயங்கரமான ஆள்தான் போல. முதலமைச்சர் மருமகளையே பயப்படவைத்துள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றார்கள். கிருத்திகா உதயநிதி, தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகள், அதாவது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி ஆவார்.


Click it and Unblock the Notifications











