Jayam Ravi: பொங்கல் ரேஸ்க்கு வராத அஜித்.. காத்திருந்து களமிறங்கும் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக முன்னர் அறிவித்துவிட்டு, தற்போது பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ளது, அஜித் ரசிகர்களை அப்செட் செய்தாலும், தமிழ் திரையுலகில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களை, விநியோகஸ்தர்களை, நடிகர்களை இயக்குநர்களை கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. விடாமுயற்சி பொங்கலுக்கு வராது என்பதால், ஏற்கனவே படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து, சென்சார் சர்டிஃபிகேட் வரை வாங்கி வைத்துள்ள படங்களை ரிலீஸ் செய்ய படக்குழுக்கள் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். இப்படியான நிலையில் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் முடிந்திருந்தாலும் படத்தின் ஃபைனல் மிக்ஸிங், சென்சார் செய்வது போன்ற பல்வேறு பணிகள் இன்னும் அப்படியே உள்ளது. இதனால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது முடியாத காரியம் என்பதால், ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து, படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என படக்குழு தெரிவித்துள்ளது.

jayam ravi kadhalikka neramillai pongal 2025

இது ரசிகர்களை வருத்தம் மட்டும் இல்லாமல், கோபமும் அடையச் செய்துள்ளது. மேலும் படத்தின் டிரைலர் ஜனவரி 1இல் புத்தாண்டு ட்ரீட்டாக வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, விடாமுயற்சி பொங்கலுக்கு வராது என்ற துயரத் தந்திதான் வந்து சேர்ந்தது. 2025ஆம் ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்துடன் தொடங்கியுள்ளது.

jayam ravi kadhalikka neramillai pongal 2025

விடாமுயற்சி: விடாமுயற்சி போன்ற பெரிய நடிகரின் படம் வரவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும், பொங்கல் விடுமுறையை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில், திரைத்துறையினர் பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கு ஏற்ற வகையில் பணிகளைத் துவக்கியுள்ளனர்.

jayam ravi kadhalikka neramillai pongal 2025

ஜெயம் ரவி: அதாவது ஏற்கனவே, விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 ரிலீஸ் ஆகவுள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள, காதலிக்க நேரமில்லை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. முதலில் இந்தப் படத்தை பிப்ரவரி 14இல் ரிலீஸ் செய்யலாம் என்ற மனநிலையில் படக்குழு இருந்துள்ளது. ஆனால் இப்போது முடிவினை மாற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

jayam ravi kadhalikka neramillai pongal 2025

ஜனவரி 10: இதுமட்டும் இல்லாமல், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ்காரன் படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிவைப்பு செய்திக்குப் பின்னரே இந்த அறிவிப்பு படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jayam ravi kadhalikka neramillai pongal 2025

இதுமட்டும் இல்லாமல், ஏற்கனவே பொங்கலுக்கு அதுவும், ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ்க்கு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, வணங்கான் படமும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

jayam ravi kadhalikka neramillai pongal 2025

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X