பூஜையுடன் துவங்கிய ஜெயம் ரவி -ராஜேஷின் ஜெஆர்30 படம்.. ஹீரோயின் யாருன்னு பாருங்க!
சென்னை : நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன், அகிலன் என அடுத்தடுத்த இரு படங்கள் ரிலீசாக உள்ளன.
இதையடுத்து எம் ராஜேஷ் இயக்கத்தில் தற்போது அடுத்தப்படத்தில் இணைந்துள்ளார் ஜெயம் ரவி.
இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் சிறப்பான வகையில் நடந்துள்ளது. படத்தில் நட்டியும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் இறுதியாக கோமாளி படம் வெளியானது. இந்தப் படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் காலதாமதமாக வெளியான நிலையில், தற்போது ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் முக்கியமான கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். டீசர், பாடல் வெளியீடு என அனைத்தையும் பிரம்மாண்டமான அளவில் வெளியிட்டு வருகிறது டீம். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் ஜெயம் ரவி.

அகிலன் படத்தில் ஜெயம் ரவி
அடுத்ததாக பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அவருக்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார்.

எம் ராஜேஷுடன் கூட்டணி
இதனிடையே அடுத்ததாக பிரபல காமெடி படங்களை இயக்கியுள்ள எம் ராஜேஷ் இயக்கத்தல் இணைந்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ஜெஆர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகியுள்ளார் பிரியங்கா மோகன். பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

முக்கிய கேரக்டரில் நட்டி
ஜெயம் ரவியின் அகிலன் படத்தை தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தல் நட்டி நட்ராஜ் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோல விடிவி கணேஷும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரம்மாண்டமாக போடப்பட்ட பூஜை
இதனிடையே இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், எம் ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். வித்தியாசமான அழகான உடையில் பிரியங்கா மோகன் இந்த பூஜையில் கலந்துக் கொண்டார்.

சிறப்பான கூட்டணி
எப்போதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை இயக்கி வருகிறார் எம் ராஜேஷ். இவரது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட். ஜெயம் ரவியும் காமெடியில் சிறப்பாக கலக்குவார். இதனிடையே இந்த கூட்டணி ரசிகர்களுக்கு சிறப்பான காமெடி விருந்து படைக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











