திருமண விழாவில் விஜய்யை சந்தித்த ஜெயம் ரவி...செம வைரலாகும் வீடியோ

சென்னை : ரஜினிக்கு பிறகு உலகம் முழுவதிலும் அனைத்து வயதினரையும் கவர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் விஜய். இதனால் விஜய்யை எங்கு பார்த்தாலும் அது பற்றிய ஃபோட்டோ, வீடியோக்களை உடனடியாக வைரலாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்ற போது அங்கு ரசிகர் விஜய்யை சந்தித்து ஆட்டோகிராஃப் வாங்கி உள்ளார். இந்த ஃபோட்டோவை கூட விஜய் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடினர். அதைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் இருந்து, சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் முகத்தை மாஸ்க்கால் மறைத்தப்படி, தலையை குனிந்த படி சென்றார்.

அப்படி இருந்தும் விஜய்யை அடையாளம் கண்டு கொண்ட சிலர் அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பரவ விட்டு, வைரலாக்கினர். இதைத் தொடர்ந்து சென்னையில் புறநகர் பகுதியில் விஜய்யின் சொகுசு கார் சென்றதை கூட வீடியோவாக எடுத்து வைரலாக்கினர்.

திருமண வரவேற்பில் விஜய்

திருமண வரவேற்பில் விஜய்

இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார் விஜய். இந்த ஃபோட்டோ, வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகின்றன.

ஜெயம் ரவி – விஜய் சந்திப்பு

ஜெயம் ரவி – விஜய் சந்திப்பு

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நீண்ட தலை முடியுடன் இருந்த ஜெயம் ரவி, விஜய்யுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோக்களும், ஃபோட்டோக்களும் வைரலாகி வருகின்றன. பொன்னியின் செல்வன் பட கெட்அப்பிலேயே ஜெயம் ரவி இன்னும் இருப்பதால் இந்த ஃபோட்டோ கூடுதல் ஸ்பெஷலாகி உள்ளது.

கலாநிதி மாறனும் இருக்கார்

கலாநிதி மாறனும் இருக்கார்

மற்றொரு ஃபோட்டோவில் கலாநிதி மாறன் அருகில் அமர்ந்து விஜய் பேசிக் கொண்டிருப்பது போல் உள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தான். முழு வீச்சில் இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.

தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள்

தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள்

தீபாவளியை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாம். பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், டைரக்டர் செல்வராகவன் வில்லனாகவும் நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னையில் டூயட்

சென்னையில் டூயட்

பீஸ்ட் படத்தின் நான்காம் கட்ட ஷுட்டிங் தீவிரமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடத்தப்பட உள்ளது. தற்போது விஜய் - பூஜா ஹெக்டே பங்கேற்கும் டூயட் பாடல் சென்னை கோகுலம் ஸ்டூடியோசில் படமாக்கப்பட்டு வருகிறது.

இவர் தான் எழுதிருக்காரா

இவர் தான் எழுதிருக்காரா

இந்த படத்தில் அராபிக் பாடல் ஒன்று இடம்பெறுவதாக ஏற்கனவே கூறினார்கள். இந்த பாடல் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கான பாடலாம். இந்த அராபிக் பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் தானாம். அனிருத் இசையமைத்து வரும் இந்த பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X