அம்பானி மகன் கையில 18 கோடி வாட்ச்.. ஜெயம் ரவிக்கு மாமியார் இத்தனை கோடிக்கு வாட்ச் கொடுத்தாரா?
சென்னை: அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சைரன் 108 திரைப்படம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இந்த படத்தை அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார்.
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து உருவாக உள்ள புதிய படத்தையும் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க உள்ள நிலையில், சமீபத்தில் தனது மருமகன் ஜெயம் ரவிக்கு காஸ்ட்லியான வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பானி மகன் வாட்ச்: ஆனந்த் அம்பானி தனது ப்ரி வெட்டிங் நிகழ்ச்சியில் கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் விலை 18.2 கோடி ரூபாய் என்பது பேஸ்புக் ஓனர் மார்க் ஸுகர்பெர்க்கையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கிரேட் 5 டைட்டானியத்தால் இந்த கடிகாரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரிச்சர்ட் மைல் RM 56-02 என்கிற அந்த கடிகாரம் உலகிலேயே வெறும் 10 பீஸ்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கு பாதி வசூல்: சுமார் 30 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் 15 கோடி ரூபாய் வசூல் ஒட்டுமொத்தமாக ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. இந்த படமோ ஜெயம் ரவிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பாதிக்குப் பாதி மட்டுமே வசூலை கொடுத்து ஏமாற்றியுள்ளது.
அடுத்தும் மாமியார் தயாரிப்பில்: ஏற்கனவே சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் ஜெயம் ரவி அடங்கமறு, நடித்த படங்களில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான சைரன் திரைப்படமும் மாமியார் தயாரிப்பு படம்தான். அடுத்து, அடங்கும் ஒரு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தையும் சுஜாதா விஜயகுமார் தான் தயாரிக்க உள்ளார். சைரன் திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்கிற நிலையில், மீண்டும் ஒரு படத்தை கொடுத்து எப்படியாவது லாபத்தை சுஜாதா விஜயகுமாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஜெயம் ரவி ஈடுபட்டுள்ளார்.

மாமியார் தந்த பரிசு: இந்நிலையில் அதற்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கும் விதமாக ஜெயம் ரவிக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான காஸ்ட்லி வாட்ச்சை சுஜாதா விஜயகுமார் பரிசாக அளித்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோலக்ஸ் வாட்ச்: விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சூர்யாவுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக வழங்கினார். இந்நிலையில், ஜெயம் ரவிக்கு அவரது மாமியார் 1.5 கோடிக்கு வாட்ச் பரிசாக கொடுத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஜெயம் ரவி சோலோவாக நடித்து வெளியான அகிலன், இறைவன் மற்றும் சைரன் படங்கள் ஃபிளாப்பான நிலையில், அடுத்து காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு கைகொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அந்த படம் அவருக்கு மல்டி ஸ்டாரர் படம் என்பதால் கைகொடுக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications