ஜெயம் ரவி - நயன்தாரா முதல் முறை ஜோடி சேரும் படம் நாளை தொடங்குகிறது!
ஜெயம் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில், நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ராஜா இயக்குகிறார். சொந்தத் தம்பியான ரவியை வைத்து அவர் இயக்கும் 6 வது படம் இது.

ரீமேக் அல்ல
முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தை கொண்ட, இன்னும் பெயர் சூட்டப்பட்ட ஜெயம் ரவி இதுவரை நடித்திராத வேடத்தில் நடிக்கிறார். படத்தின் கதையை இயக்குநர் ஜெயம் ராஜாவே எழுதியிருக்கிறார்.

நாளை படப்பிடிப்பு
படப்பிடிப்பு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் உள்ள பின்னி மில்லில், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக அங்கு ஒரு ரெயில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு
ஜெயம் ரவி-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் காட்சிகள் முதலில் படமாக உள்ளன. ஹைதராபாத்தில் தங்கி ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இன்று புதன்கிழமை சென்னை திரும்புகிறார்.

முதல் முறை
தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நயன்தாரா, ஜெயம் ரவியுடன் இணைவது இதுவே முதல்முறை.
நாளை (வியாழக்கிழமை) பின்னி மில்லில் நடைபெறும் படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











