Aarti Ravi: ஜெயம் ரவி என்கிட்ட எதுவுமே சொல்லல.. விவாகரத்து அறிவிப்பு பற்றி தெரியாது - ஆர்த்தி ரவி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரியப் போவதாக நேற்று முன் தினம் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமந்தா - நாக சைதன்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி என சமீபத்தில் விவாகரத்து ஆன சினிமா பிரபலங்கள் பலரும் ஒரு மனதாகவே பிரிவை ஒன்றாக இணைந்து அறிவித்தனர்.

jayam ravi aarti ravi divorce

ஆனால், ஜெயம் ரவி மட்டுமே அறிக்கை வெளியிட்ட போதே, ஆர்த்தியின் அறிவிப்பு எங்கே என பலரும் கேட்டு வந்த நிலையில், தற்போது இப்படியொரு அதிர்ச்சியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அவசரப்பட்ட ஜெயம் ரவி: சினிமா பிரபலங்கள் திருமணமாகி குழந்தைகள் நன்கு வளர்ந்த நிலையில், கிரே டைவர்ஸ் என்கிற பாணியில் வயதான காலத்தில் தங்களது இணையை பிரிந்து வாழ்வது என்கிற முடிவை எடுத்து வருகின்றனர். ஆனால், அந்த விவகாரத்து தொடர்பாக இருவரும் வழக்கறிஞர்கள், சைக்காட்ரிஸ்ட் உள்ளிட்ட பலரிடம் பேசி சுமூக தீர்வை எட்டிய பின்னர் தான் விவாகரத்து அறிவிப்பை இருவரும் ஒருமனதாக அறிவிப்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயம் ரவி அவசர முடிவை எடுத்து தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

jayam ravi aarti ravi divorce

எனக்கு எதுவுமே தெரியாது: ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகி கிடக்கிறேன். எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியப்படுத்தவில்லை. ஜெயம் ரவி மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்து வெளியிட்டுள்ளது எனக்கு கவலையை அளித்துள்ளது. நான் என்னுடைய இரு மகன்களின் வருங்காலத்தை நினைத்துக் கவலைப்படுகிறேன். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து ஜெயம் ரவியிடம் பேச முயற்சித்த போது, அவர் அதற்கு அனுமதியே வழங்காமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தவறான பேச்சுகள்: மேலும், சமூக வலைதளங்களில் என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்கள் பரவவும் இது காரணமாக அமைந்து விட்டது. ஜெயம் ரவி இப்படி செய்வார் என கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. 18 வருடங்கள் ஒன்றாக இருந்த வாழ்க்கை முற்றிலுமாக உடைந்து போய் விட்டது என கண்ணீர் மல்க ஆர்த்தி ரவி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

jayam ravi aarti ravi divorce

குழந்தைகள் தான் முக்கியம்: எப்போதும் போல இந்த முறையும் பத்திரிகையாளர்கள் இந்த தருணத்தில் எனக்கு துணையாக நிற்பதற்கு நன்றி. எங்கள் குடும்ப பிரைவசியை காப்பாற்ற உதவுங்கள். தேவையற்ற வீண் வதந்திகளை யாருமே பரப்ப வேண்டாம். ஒரு தாயாக என்னுடைய முதல் கடமையே என்னுடைய இரு குழந்தைகளையும் பேணி காக்க வேண்டும். அபாண்டமாக என் மீது வீண் பழியை யாரும் சுமத்த வேண்டாம். இதுதொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்ய காத்திருக்கிறேன் என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக அவரது நண்பர்கள், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X