Jayam Ravi: பண விஷயத்தில் ரவியை ஏமாற்றிய மாமியார்.. ஆர்த்தி ஓவர் சந்தேகம்.. எப்படி வாழ முடியும்?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் விஷயம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் பல புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக ஜெயம் ரவி தான் விவாகரத்து செய்ய என்ன காரணம் என கூறும் விஷயங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஆர்த்தி தரப்பில் இருந்து இதுவரை ஒரு தெளிவான அறிக்கையும் வெளிவரவில்லை. மாறாக ஜெயம் ரவி மீது குற்றச்சாட்டுகள் மட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஜெயம் ரவி இந்த விவாகரத்து தொடர்பாக அறிவிக்கும்போது இருவரும் பரஸ்பரமாக பேசி இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என பலரும் நினைத்தனர். ஆனால் இவர்களின் விவாகரத்து அவ்வாறாக நடக்கவில்லை. இந்நிலையில் ஜெயம் ரவி தரப்பில் இருந்து சில விஷயங்கள் வெளியே வந்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அதாவது, " நான் விவாகரத்தை அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது குழந்தைகள் என்னுடதான் இருந்தார்கள். என்னால் எனது இரண்டாவது பையனிடம் பேச முடியவில்லை. முதல் பையனிடம் இது தொடர்பாக பேசினேன். ' நானும் அம்மாவும் சேர்ந்திருந்தால் ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். நாங்கள் பிரிந்து இருப்பதே சரி' எனக் கூறினேன். அதற்கு எனது மூத்த மகன், 'உங்க சந்தோசம்தான் முக்கியம் அப்பா, ஆனால் நீங்களும் அம்மாவும் சேர்ந்திருந்தால் எனக்கு சந்தோசமாக இருக்கும்' எனக் கூறினான். எனது மூத்தமகனிடம் விரிவாக பேசி நான் இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தை புரியவைத்தேன்.

பண விசயம்: ஜூன் மாதத்தில் ஒரு மகனின் பிறந்த நாளும் ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு மகனின் பிறந்த நாளும் வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் எனது மகனின் பிறந்த நாளைக் கொண்டாட நான் ஐடிசி ஹோட்டலில் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் ஆர்த்தி, நான் ஐடிசி ஹோட்டலில் இருக்கின்றேன் எனத் தெரிந்தும், மகன்களை அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றுவிட்டார். இத்தனை ஆண்டுகால திருமண உறவில் எனக்கென தனி சேமிப்புக் கணக்கு எதுவும் இல்லை. ஆர்த்தியுடன் ஜாயிண்ட் அக்கவுண்ட்தான் உள்ளது. நான் எங்கு சென்று கார்ட் ஸ்வைப் செய்தாலும், உடனே ஆர்த்திக்கு மெசேஜ் போகும். இதுமட்டும் இல்லாமல், உடனே எனக்கு ஃபோன் செய்து, எங்கு இருக்கின்றீர்கள்? எதற்காக கார்ட் ஸ்வைப் செய்தீர்கள் என கேள்வி கேட்பார். என்னுடைய தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டது.

ஏமாற்றம்: எங்களிடம் மொத்தம் ஆறு கார்கள் உள்ளது. இதில் நான்கு கார்கள் ஆர்த்தியின் பேரில் உள்ளது. என்னுடைய பெயரில் இரண்டு கார்கள் மட்டுமே உள்ளது. என்னை வைத்து எனது மாமியார் மொத்தம் மூன்று படங்கள் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே அவர்கள் என்னிடத்தில் நஷ்டம் எனக் கூறினார்கள். ஆனால் படத்தின் வரவு செலவு கணக்குகளை பார்த்தால் படம் வெற்றிப் படங்கள் என்பது தெளிவாகின்றது. ஆனால் சைரன் உள்ளிட்ட மூன்று படங்களையுமே தோல்விப் படம் என என்னிடம் கூறினார்கள்.

சந்தேகம்: ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்புக்காக சென்றபோது, ஆர்த்தி வீடியோ கால் செய்து என்னுடன் அறையில் யாராவது தங்கி உள்ளார்களா எனக் கேட்டார். இப்படி ஓவர் சந்தேகத்தில் உள்ளார். என்னிடம் கேட்பது மட்டும் இல்லாமல், எனது உதவியாளர்களுக்கும் படக்குழுவினருக்குமே போன் செய்து கேட்கின்றார். இதனால் நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறியெல்லாம் இருக்கின்றேன் எனக் கூறியுள்ளார். ஜெயம் ரவி தரப்பில் இருந்து தற்போது வெளியே வந்துள்ள இந்த விஷயங்கள் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. குறிப்பாக மருமகனை மாமியார் பண விஷயத்தில் ஏமாற்றியது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், ஆர்த்தி தனது கணவர் மீது இந்த அளவுக்கு சந்தேகமாக இருப்பது என்பது குடும்ப வாழ்க்கைக்கு சரியானதாக இருக்காது என பலரும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











