Brother Box Office Day 4: வசூலில் சொதப்பும் ஜெயம் ரவி.. நான்கு நாளில் எவ்வளவுதான் கலெக்‌ஷன்? -விபரம்

சென்னை: தீபாவளிக்கு வெளியான நேரடியான மூன்று தமிழ் படங்களில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் படமும் ஒன்று. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதர் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

அதாவது 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் இருந்து நேரடியாக மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த மூன்று படங்களில் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தினைப் பெற்ற படம் என்றால் அது பிரதர் படம்தான். படத்தின் முதல் பாதி மிகவும் மொக்கையாக இருப்பதாகவும் , இரண்டாம் பாகம்தான் ஓரளவிற்கு படத்தின் கதைக்குள் சென்றிருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். இதுமட்டும் இல்லாமல் படத்தில் சரியான கன்ட்டியுனிட்டி இல்லை எனவும் விமர்சகர்கள் விமர்சித்தனர்.

jayam ravi brother box office

மேலும் படத்தில் திறமையான நடிகர்கள் இருந்தும் படத்தில் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டனர். இதனால் தீபாவளி ரிலீஸ் படங்களில் வசூல் ரேஸில் அதிக அடிவாங்கிய படம் என்றால் அது பிரதர் படம்தான். தீபாவளி போன்ற மிகப்பெரிய விழாவிற்கு படத்தினை ரிலீஸ் செய்ய முடிவு செய்த பின்னர் படத்திற்கு போதுமான அளவிற்கு புரோமோஷன் இதுவுமே செய்யாமல் இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, இசை வெளியீட்டு விழாவினை ஆரவாரமே இல்லாமல், நடத்தினர்.

சந்தேகம்: தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படங்களின் படக்குழுவினர் தொடர்ந்து பல நகரங்களில் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் பிரதர் படத்தின் சைடில் மட்டும் தொடர்ந்து கப்-சிப் மோட்தான் இருந்தது. இதனால் படத்தின்மீது படக்குழுவினருக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என ரசிகர்களே கேள்வி கேட்கும் அளவிற்கு இருந்தது. படம் ஃபேமிலி சென்டிமென்ட் குறிப்பாக அக்கா - தம்பி உறவைப்பற்றிய படம் என்பதால், அதனை மிகவும் டீப்பாக சொல்லி இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

jayam ravi brother box office

குடும்ப ரசிகர்கள்: படம் இளம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தினைப் பெற்றாலும், ஃபேமிலி ஆடியன்ஸிடம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூலைவிட மூன்றாம் நாள் வசூல் அதிகரித்துள்ளது. அதாவது படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 3 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. அதேபோல் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் கொஞ்சம் குறைந்தது. அதாவது இரண்டாவது நாளில் படம் 2.5 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

jayam ravi brother box office

வசூல்: இரண்டாவது நாள் வசூல் குறைந்ததால் படக்குழு கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் மூன்றாவது நாளில் படம் ரூபாய் 3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் வார இறுதி நாளான நேற்று, பிரதர் படத்தின் வசூல் மிகவும் மோசமாக இருந்துள்ளது. இந்தியாவில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 1 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மொத்தத்தில் படம் இதுவரை சுமார் 12 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. வார இறுதி நாளிலேயே படத்தின் வசூல் இந்த அளவிற்கு குறைந்துள்ளதால், படக்குழு வருத்தத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X