Jayam Ravi: மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு.. சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட ரெடியான ஜெயம் ரவி?
சென்னை: தமிழ் சினிமாவில் பெரிதும் எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்த ஜெயம் ரவி மீது தற்போது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. அதற்கு எல்லாம் காரணம் அதிரடியாக தனது மனைவியை பிரியப் போவதாக அவசர அவசரமாக அவர் அறிவித்தது தான்.
பாலிவுட் சினிமாவில் கூட இல்லாத அளவுக்கு சமீப காலமாக கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு மத்தியில் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. பல்வேறு காரணங்களுக்காக கணவன், மனைவி இடையே பிரிவு வருவதாக கூறினாலும் இன்னொரு பெண்ணை பார்த்து விட்டால் தான் இந்த பிரச்சனையே நடப்பதாக பூகம்பங்கள் வெடிக்கின்றன.

நாக சைதன்யா - சமந்தாவை விவாகரத்து செய்து விட்டு, சில ஆண்டுகள் சைலன்ட்டாக இருந்து விட்டு தற்போது சோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்துக் கொண்டது போலத்தான் மற்ற விவாகரத்து செய்துக் கொண்ட பிரபலங்களும் நடந்துக் கொள்வார்கள் என்கிற கணிப்புகள் தான் அதிகம் எழுந்து வருகின்றன. மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு, பாடகியுடன் கோவா டூர் என ஜெயம் ரவியை சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மனைவி மகன்களை பிரிந்த ஜெயம் ரவி: எடிட்டர் மோகனின் மூத்த மகன் மோகன் ராஜா இயக்குநராக வலம் வருகிறார். இளைய மகன் ஜெயம் ரவி ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். ஜெனிலியாவுடன் ஜெயம் ரவி நடிக்கும் போது கூட இந்த ஜோடி நல்லா இருக்குதுன்னு தான் பலரும் சொன்னார்களே தவிர எந்தவொரு கிசுகிசுவும் வரவில்லை. ஆனால், தற்போது திடீரென மனைவி ஆர்த்தி ரவி மற்றும் தனது இரு மகன்களையும் ஜெயம் ரவி பிரிந்து விட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடகியுடன் தொடர்பு?: கெனிஷா பிரான்சிஸ் எனும் பாடகியுடன் தான் ஜெயம் ரவி கோவா, பெங்களூர் என கடந்த சில மாதங்களாக சுற்றி வருவதாக அதிர்ச்சியளிக்கும் விதமான தகவல்கள் வெளியாகி உள்ளன. பத்திரிகையாளர் அந்தணன் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவிக்கும் பாடகிக்கும் இடையேயான தொடர்பு தான் அவர் ஆர்த்தியை பிரியக் காரணம் என்கின்றனர்.

பிரதர் ஆடியோ லாஞ்ச்: இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்துள்ள பிரதர் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் கவினின் பிளடி பெக்கர் உள்ளிட்ட படங்களுடன் ஜெயம் ரவியின் பிரதர் படமும் மோதுகிறது. இந்நிலையில், அதன் ஆடியோ லாஞ்ச் மற்றும் டீசர் வெளியீட்டு விழா செப்டம்பர் 21ம் தேதி நாளை நடைபெறுகிறது.

ஜெயம் ரவி ரெடி: நடிகர் ஜெயம் ரவியை சுற்றி வலம் வரும் சர்ச்சைகளுக்கு இதுவரை மெளனம் காத்து வரும் ஜெயம் ரவி இசை வெளியீட்டு விழாவில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகி விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பிரதர் படத்தைத் தொடர்ந்து ஜீனி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறவுள்ள வேட்டையன் இசை வெளியீட்டு விழாவை விட ஜெயம் ரவியின் பிரதர் ஆடியோ லாஞ்ச் மீதுதான் தற்போது கோடம்பாக்கத்தின் கவனம் திரும்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











