ஆர்த்தியிடமிருந்து அதனை மீட்ட ஜெயம் ரவி?.. அதுகூட இத்தனை நாள் மனைவி கட்டுப்பாடுதானா?.. ஷாக் தகவல்

சென்னை: தனிப்பட்ட காரணங்களால் தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக ஜெயம் ரவி அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆர்த்தி சொன்னதையடுத்து; நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரவி, விவாகரத்து தொடர்பாக ஆர்த்திக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். இப்போது தனக்கு தெரியாது என்று சொல்வது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவந்த அவர்களுக்குள் எந்த சச்சரவும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த சில காலங்களாகவே இருவருக்கும் தினமும் பிரச்னை வருகிறது என்று தகவல்கள் வெளியாகின. சூழல் இப்படி இருக்க தனிப்பட்ட காரணங்களாலும், தன்னை சார்ந்தவர்களின் நலனுக்காகவும் தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன் என கூறி விவாகரத்து முடிவை அறிவித்தார் ரவி.

jayam ravi aarti tamil cinema

ஆர்த்தியின் விளக்கம்: ஆனால் ஆர்த்தி கொடுத்த விளக்கத்திலோ, ரவியிடம் பலமுறை பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர் அதற்கான வாய்ப்பினை கொடுக்கவில்லை. விவாகரத்து முடிவு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. நானும், எனது இரண்டு பிள்ளைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ஆர்த்தியுடன் ரவி அமர்ந்து பேசியிருக்கலாமே என்று பலர் கூற ஆரம்பித்தார்கள். அதேபோல் மனைவியை பிரிந்து செல்பவன் நல்ல மனிதன் இல்லை என்று குஷ்பூ நேற்று திடீரென ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அது ரவிக்காகத்தான் போடப்பட்டது என்று கருதப்படுகிறது.

ரவி கொடுத்த பதில்: இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு ஏற்பட்ட தொடர்புதான்; இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கிசுகிசுக்கள் எழுந்தன. சூழல் இப்படி இருக்க நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரவி, 'இன்னொரு பெண்ணை என்னுடன் தொடபுப்படுத்தி பேசுவது தேவையற்றது. அவர் ஒரு ஆதரவற்ற பெண். நானும் அவரும் இணைந்து எதிர்காலத்தில் ஒரு ஆன்மீக மையத்தை அமைக்கவிருக்கிறோம்' என்று தெரிவித்திருந்தார். இதனால் தன்னை பற்றி வந்த கிசுகிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆர்த்திக்கு தெரியும்: மேலும் பேசிய அவர், "நீண்ட காலமாகவே விவாகரத்து முடிவில்தான் இருந்தேன். இதுதொடர்பாக இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸும் அனுப்பினேன். அவரது அப்பாவும் இதுகுறித்து என்னிடம் பேசினார். ஆனால் இப்போது எனக்கு தெரியாது என்று ஆர்த்தி சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. எனது மூத்த மகனிடம் இதுகுறித்து புரியும்படி சொல்லியிருக்கிறேன். நாங்கள் இணைந்து வாழ வேண்டும் என்றுதான் இரண்டு மகன்களும் ஆசைப்படுகிறார்கள். மகன்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

வெளியான தகவல்: இந்நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை மீட்டிருக்கிறார் என்றும்; இதற்காக மெட்டா நிறுவனத்திடம் முறைப்படி முறையிட்டு அந்த அக்கவுண்ட்டை மீட்டிருக்கிறார். தனது பட ப்ரோமோஷன்களுக்கு சோஷியல் மீடியா அக்கவுண்ட் அவசியம் என்பதால் இந்த முடிவை ஜெயம் ரவி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் கேள்வி: இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், ஜெயம் ரவியை அவரது மனைவியும், மாமியாரும் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அரசல் புரசலாக தகவல்கள் ஓடின. இப்போது இந்தத் தகவலை பார்க்கையில் ரவியின் இன்ஸ்டா அக்கவுண்ட்டையும்கூடவா ஆர்த்தி தனது கன்ட்ரோலில் வைத்திருந்தார். இதையெல்லாம் நம்புவதா வேண்டாமா என்ற கேள்விகளை முன்வைத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X