Just In
- 17 min ago
சேலை கட்டி வந்த கேபி.. கமலே ஷாக் ஆகிட்டார்.. இதற்காகத்தான் பணப்பெட்டியை எடுத்து சென்றாராம்!
- 32 min ago
தொப்பி, மாஸ்க் அணிந்து வாரணாசியில் அஜித்.. தெருக்கடையில் ரசித்து சாப்பிட்டார்.. கடைக்காரர் வியப்பு!
- 34 min ago
சிரிப்ப ஃபேக்குன்னு சொல்லிட்டாங்க.. டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணாங்க.. கமலிடம் புலம்பிய ஹவுஸ்மேட்ஸ்!
- 57 min ago
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.. அமீரின் 'நாற்காலி'யில் எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்.. முதல்வர் வெளியிட்டார்
Don't Miss!
- Sports
சத்தமே இல்லை.. வாயை கூட திறக்காத ஆஸி. கேப்டன்.. மொத்தமாக அடங்கிய வீரர்கள்.. இது தேவையா?
- News
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 18ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பூலோகம் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி.. வெளியானது மாஸ் அப்டேட்!
சென்னை : இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் கார்த்தி,விக்ரம், சரத்குமார் ஆகியோருடன் நடிகர் ஜெயம்ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரோமியோ ஜூலியட், போகன் போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து இப்போது மூன்றாம் முறையாக இயக்குனர் லக்ஷ்மன் உடன் இணைந்து இருக்கும் ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகிறது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா.. சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!
தன்னுடன் பணியாற்றியுள்ள சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் மீண்டும் இணையும் ஜெயம்ரவி இப்பொழுது அடுத்த திரைப்படத்தில் பூலோகம் பட இயக்குனருடன் இணைய உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான கதை
டிக் டிக் டிக் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது மீண்டும் விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானியாக நடித்து வரும் ஜெயம் ரவி தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிறந்தவராக விளங்கி வருகிறார்.

அமேசான் தளத்தில்
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த பூமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகள் காரணமாக வரும் பொங்கலுக்கு பூமி அமேசான் தளத்தில் வெளியிடப்படுகிறது என்பது உறுதியாகி உள்ளது.

மூன்றாவது முறையாக
விஞ்ஞானம் கலந்த விவசாயத்தை மையமாக கொண்டு விவசாயத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தை இயக்குனர் லக்ஷ்மன் இயக்கி இருக்க இவருடன் இணைந்து ஏற்கனவே ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள நிலையில் இப்போது மூன்றாவது முறையாக இணைந்து மேலும் ஒரு வெற்றியைக் கொடுக்க உள்ளார்..

பிரம்மாண்டமான பொருட்செலவில்
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் நிலையில் அதில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் பலர் நடித்து வர ஜெயம் ரவி முக்கியமான வேடத்தில் நடித்து வரும் நிலையில் பல்வேறு கட்டங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
இந்த நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு ஜெயம் ரவி தனது அடுத்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில் வடசென்னையின் குத்துச் சண்டை வரலாற்றையமாக கொண்டு எடுக்கப்பட்ட பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் தனது 28வது படத்தை இயக்க உள்ளதாகவும் அதை ஸ்க்ரீன் சீன் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.