டைவர்ஸுக்கு காரணம்.. மூச்சு முட்டி வீட்டிலிருந்து வெளியேறினேன்.. எதுவுமே இல்லை..ஜெயம் ரவி ஓபன் டாக்
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். மேலும் தனக்கும் பாடகி கெனிஷாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தெளிவுப்படுத்திவிட்டார். அதேசமயம் ஆர்த்தி ஒரே ஒரு விளக்கம் அளித்ததோடு அமைதியாக இருக்கிறார். இந்தச் சூழலில் ஜெயம் ரவி அளித்திருக்கும் பேட்டியில் தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
கோலிவுட்டில் சமீபகாலமாக விவாகரத்துகள் அதிகரித்துவருகின்றன. தனுஷ் - ஐஸ்வர்யா, சமந்தா - நாக சைதன்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி என நீண்டுகொண்டிருந்த லிஸ்ட்டில் இப்போது ஜெயம் ரவி இணைந்திருக்கிறார். காதலித்து ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட அவர் 15 வருடங்கள் வாழ்ந்தார். அவர்களுக்கு ஆர்யன், ஆயான் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த ரவியை சுற்றி சமீபகாலமாக பிரச்னைகள் ஓட ஆரம்பித்திருக்கின்றன.

காரணம் என்ன?: தனது திருமண வாழ்க்கையிலிருந்து ரவி விலகுவதாக அறிவித்ததற்கு காரணமே ஆர்த்தியும், ஆர்த்தியின் தாயும்தான் என்று பலர் சொன்னார்கள். அதாவது ரவியை முழுக்க முழுக்க அவர்கள் இரண்டு பேரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துவிட்டார்கள். ஒருகட்டத்தில் ரவிக்கான கதை, சம்பளத்தைகூட அவர்கள்தான் முடிவு செய்தார்கள் என்று ஒருபக்கம் தகவல் ஓட; மறுபக்கமோ ஆர்த்தி ரவியை சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்தார் என்றெல்லாம் தகவல்கள் பரவின.
கெனிஷாவுடன் தொடர்பு: அதேசமயம் ஆர்த்தியால் எந்தப் பிரச்னையும் இல்லை; ஆனால் ஜெயம் ரவியோ சமீபமாக பாடகி கெனிஷாவுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி கோவாவில் இரண்டு பேரும் குடித்தனம் நடத்துகிறார்கள் என்று சொன்னார்கள். மேலும் அதற்கு ஆதாரமாக ரவியின் காரை கோவாவில் பாடகி கெனிஷா பயன்படுத்தியதையும் முன்வைத்தார்கள். ஆனால் அது நட்பு ரீதியான பழக்கமாக ஏன் இருக்கக்கூடாது என்று ரவியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆர்த்தியின் வேலை: சூழல் இப்படி இருக்க இந்த விவகாரத்தில் கெனிஷாவை வேண்டுமென்றே ஆர்த்திதான் உள்ளே இழுத்துவிட்டார் என்ற குரல்கள் கேட்டன. ஜெயம் ரவியோ தனக்கும் கெனிஷாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும் கெனிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார். அந்தப் போஸ்ட் ஆர்த்தியை மறைமுகமாக தாக்கித்தான் போடப்பட்டது என்று திரைத்துறையினரால் கருதப்படுகிறது.
ரவி ஓபன் டாக்: இந்நிலையில் ஜெயம் ரவி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “எனது மகன்களான ஆரவ் மற்றும் அயான்தான் என்னுடைய எதிர்காலமே. அவர்களை என்னுடைய கஸ்டடியில் எடுக்க போராடுவேன். விவாகரத்துக்காக பத்து இல்லை 20 வருடங்கள்கூட நீதிமன்றத்தில் போராடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனது சந்தோஷம் என்பதே என்னுடைய இரண்டு மகன்கள்தான்.
பிளான் செய்திருந்தேன்: என்னுடைய மூத்த மகனை வைத்து நான் படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தேன். அது என்னுடைய கனவு. என்னுடன் சமரசம் என்ற எண்ணமும் ஆர்த்தியிடம் இல்லை. எதற்காக இந்த விவகாரத்தில் கெனிஷா இழுக்கப்படுகிறார். விவாகரத்து தொடர்பாக நானும், ஆர்த்தியும் ஏற்கனவே பேசியிருந்தோம். அது அவர்களது வீட்டுக்கும் தெரியும். அவரது அப்பாவும் என்னிடம் பேசியிருந்தார்.
வீட்டைவிட்டு வெளியேறினேன்: ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியவில்லை. மூச்சு முட்ட ஆரம்பித்துவிட்டது. வீட்டை விட்டு வெளியேறியபோது என்னிடம் எதுவுமே இல்லை. ஒரே ஒரு கார் மட்டும்தான் இருந்தது. மும்பைக்கு குடிபெயர்ந்தேன். அடிக்கடி சென்னைக்கு வருகிறேன். கடந்த ஜூன் மாதம் எனது மூத்த மகன் ஆரவ் பிறந்தநாளுக்கு இங்கு வந்தேன். அவனுடன் அதிக நேரம் செலவழித்தேன். ஆரவ்விடம் எனது விவாகரத்து குறித்து பேசியிருக்கிறேன்” என்றார்.


Click it and Unblock the Notifications