twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 மாசத்துக்கு ராஜாவாகவே சுற்றினேன்.. அருண்மொழி வர்மன் சீக்ரெட் சொன்ன ஜெயம் ரவி!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

    இந்தப் படத்தில் க்ளைமாக்ஸ் உள்ளிட்ட காட்சிகளில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் படத்தில் இவரது உடல்மொழி சிறப்பாக பார்க்கப்பட்டது. கதையின் சிறப்பான ஓட்டத்திற்கும் இவரது கேரக்டர் பலம் சேர்த்துள்ளது.

    தீபாவளி பர்சேஸிங்கில் சூடு பறக்கும் விற்பனை.. பெண்களை கவர்ந்த பொன்னியின் செல்வன் பட்டுச்சேலைகள்! தீபாவளி பர்சேஸிங்கில் சூடு பறக்கும் விற்பனை.. பெண்களை கவர்ந்த பொன்னியின் செல்வன் பட்டுச்சேலைகள்!

    பொன்னியின் செல்வன் படம்

    பொன்னியின் செல்வன் படம்


    பொன்னியின் செல்வன் படத்தின் அனைத்து கேரக்டர்களும் கதைக்கு பலம் சேர்ப்பதாகவே அமைந்துள்ளது. நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவியின் கேரக்டர்கள் மட்டுமில்லாமல் குந்தவை, நந்தினி, சமுத்திரக்குமாரி உள்ளிட்ட கேரக்டர்களும் திரைக்கதைக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளன.

    ரசிகர்களின் மகிழ்ச்சி

    ரசிகர்களின் மகிழ்ச்சி

    நாம் சோழர்களை நேரில் சந்திக்காத நிலையில், அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்ற மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு இந்தக் கேரக்டர்கள் தந்துள்ளன. அந்த வகையில் ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், குந்தவை மட்டுமில்லாமல் வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர் என அனைத்து கேரக்டர்கள் தேர்வும் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன.

    ரசிகர்களை கவர்ந்த அருண்மொழி வர்மன்

    ரசிகர்களை கவர்ந்த அருண்மொழி வர்மன்

    குறிப்பாக அருண் மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி, பல இடங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது உடல்மொழி, கம்பீரம் முதலியவை இந்தக் கேரக்டருக்கு பலம் சேர்த்துள்ள நிலையில், ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக இந்தக் கேரக்டர் மாறியுள்ளது. அந்தவகையில் திரையரங்குகளுக்கு வரும் சீனியர் சிட்டிசன்களும் இந்தக் கேரக்டர் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

    ராஜாவாகவே மாறினேன்

    ராஜாவாகவே மாறினேன்

    இதனிடையே படத்தின் பிரமோஷனுக்காக ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் ஜெயம் ரவி, மணி சார் அட்வைசை ஏற்று தான் 6 மாத காலங்கள் ராஜாவாகவே தன்னை நினைத்துக் கொண்டதாக தெரிவித்தார். அவர் சொன்னதற்கு இணங்க தான் கீழே பார்க்காமல் நடக்க பழகியதாகவும் குறிப்பிட்டார்.

    மனதளவில் பயிற்சி

    மனதளவில் பயிற்சி

    இந்தக் கேரக்டருக்காக குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றை தான் கற்றுத் தேர்ந்ததாகவும் இதுமட்டுமில்லாமல் தான் மனதளவில் 6 மாதங்கள் இதற்காக தன்னை தயார் படுத்தியதாகவும் கண்ணில் பட்டதையெல்லாம் தன்னுடையதாக தன்னுடைய எல்லைக்குட்பட்டதாக கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    கதைக்கு தேவையானதை கொடுத்தேன்

    கதைக்கு தேவையானதை கொடுத்தேன்

    மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது என்ற படத்தின் வசனத்தை உள்வாங்கிக் கொண்டு தான் நடித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேபோல இந்தக் கேரக்டருக்காக தான் மற்ற எந்த கேரக்டரையும் பார்க்கவில்லை என்றும் கதைக்கு தேவையானதை கொடுக்க முயன்றதாகவும் ஜெயம் ரவி மேலும் குறிப்பிட்டார்.

    English summary
    Actor Jayam ravi reveals the secret behind the character Arunmozhi varman success in Ponniyin selvan movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X