எங்கேயும் காதல்.. தாஜ்மகாலில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.. கண்ணு வைக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களையும் காதல் மூடுக்கு கொண்டு வந்துள்ளார்.

காதல் மாதமான பிப்ரவரி மாதத்தை இனிதே வழி அனுப்பி வைப்போம் என தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அகிலன், இறைவன் என இந்த ஆண்டு அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.

வெண் தாடி வேந்தர்

வெண் தாடி வேந்தர்

பொன்னியின் செல்வனாக இருந்த ஜெயம் ரவி திடீரென வெண் தாடி வேந்தராக மாறி சமீபத்தில் புதிய கெட்டப் உடன் போஸ் கொடுத்து வருகிறார். இளம் ஹீரோக்களாக ரசிகர்களை கவர்ந்து வந்த பலரும் தற்போது டை கம்பெனிகளுக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே மாஸ் காட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 க்ளிம்ஸ்

பொன்னியின் செல்வன் 2 க்ளிம்ஸ்

பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், அதனை முன்னிட்டு இன்று பொன்னியின் செல்வன் 2 க்ளிம்ஸ் வெளியானது. மறுபடியும் அஜித் ரசிகர்களுக்கு லைகாவில் இருந்து ஒரு ஏமாற்றம் தரும் அப்டேட்டாகவே பொன்னியின் செல்வன் 2 அப்டேட் மாறியது. அதில், ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக பேசும் சில காட்சிகளும், அதை பார்த்து அவரே கிண்டலாக கொடுக்கும் ரியாக்‌ஷன்களும் இடம்பெற்றிருந்தன.

மனைவியுடன் தாஜ்மகாலுக்கு

மனைவியுடன் தாஜ்மகாலுக்கு

ஒரு பக்கம் மஞ்சு வாரியர் தாஜ்மகாலுக்கு சென்று போட்டோவை பதிவிட்ட நிலையில், மறுபக்கம் தனது மனைவியுடன் நடிகர் ஜெயம் ரவி தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்று அங்கே பிரத்யேகமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

எங்கேயும் காதல்

எங்கேயும் காதல்

எங்கேயும் காதல் ஹீரோவான ஜெயம் ரவிக்கு ரொமான்ஸை சொல்லித் தரணுமா என்ன? தனது மனைவி ஆர்த்தி உடன் படு ரொமாண்டிக்காக தாஜ்மகாலில் செம க்யூட்டான உடையில் கட்டிப்பிடித்தும், கைகளை பிடித்துக் கொண்டும் காதல் பொங்க போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் காதலில் விழச் செய்துள்ளார்.

செம க்யூட்

செம க்யூட்

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவியை ரொமான்டிக் மோடில் பார்த்த ரசிகர்கள் செம க்யூட் தலைவா நீங்க என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் என மார்ச், ஏப்ரல் என அடுத்தடுத்த மாதங்களில் ரசிகர்களுக்கு திரையில் பெரிய விருந்து கொடுக்க காத்திருக்கிறார் ஜெயம் ரவி.

குழந்தைகள் எங்கே

குழந்தைகள் எங்கே

ஜெயம் ரவியையும் அவரது மனைவி ஆர்த்தியையும் இப்படி ஃப்ரீயா இந்த வயதிலும் பார்த்த ரசிகர்கள், உங்களோட இரண்டு சிங்கக்குட்டிகளான ஆரவ் மற்றும் அயான் எங்கே என சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மனைவியுடன் பிப்ரவரி மாத நிறைவை கொண்டாடி தீர்த்து இருக்கிறார் ஜெயம் ரவி என்பதை அறிந்த ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்ட்டீன்களையும் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X