பொங்கலுக்கு அதிரடியாக களமிறங்கும் பூமி..வெளியானது பட்டையை கிளப்பும் டிரெய்லர் !
சென்னை: ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள படம் பூமி.
இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி லக்ஷ்மணன் இயக்க, இமான் இசை அமைத்துள்ளார்.
ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொரோனா 2ம் அலை
ஜெயம் ரவியின் திரைபயணத்தில் பூமி 25வது திரைப்படம். இந்த திரைப்படமானது முதலில் OTT ரிலீஸ் என கூறப்பட்டு பின்னர் திரையரங்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா 2ம் அலை காரணமாக படக்குழு படத்தை OTT யில் வெளியிட முடிவு செய்துள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
இந்நிலையில் படத்தை ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியிட படக்குழு முடிவு செய்தது ஜெயம் ரவி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25வது படத்தை திரையரங்கில் கொண்டாட நினைத்த ரசிகர்களுக்கு கொரோனாவால் ஏமாற்றமே மிஞ்சியது.

தரமான ட்ரைலர்
பூமி படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான அனல் பறக்கும் வசனங்கள், பின்னணி இசை ட்ரைலரை தரமாக காட்சிபடுத்துகிறது. ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் உள்ளது.

துன்பத்திலும் இன்பம்
ட்ரைலர் உடன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள படக்குழு. ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ஹாட் ஸ்டாரில் வெளிவர உள்ளது. திரையரங்கில் வெளிவரவில்லை என்ற துன்பம் ரசிகர்களிடத்தில் இருந்தாலும் ட்ரைலர் அவர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











