கோமாளி ஜெயம் ரவி இனி சர்வாதிகாரி - வெள்ளி விழா படம்

சென்னை: ஜெயம் ரவிக்கென்று தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் இருக்கிறது. அவரது படங்கள் என்றால் எந்தவிதமான ஆபாச வசனங்களும் இருக்காது. சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நிச்சயம் இடம் பெறும் என்பதால், குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர். ஜெயம் படம் தொடங்கி கோமாளி வரை பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 25ஆவது படத்திற்கு சர்வாதிகாரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கோமாளியின் வெற்றிக்கு பிறகு லக்ஷ்மன் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதை விட சிறப்பு என்னவென்றால் இது ஜெயம் ரவியின் 25வது படமாகும். இத்திரைப்படத்திற்கு இதுவரையிலும் பெயர் சூட்டப்படாமல் இருந்தது.

Jayam Ravi’s 25th Film named as Sarvadhikari

இயக்குனர் லக்ஷ்மன் இதற்கு முன் இரு படங்கள் இயக்கி உள்ளார். ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் என இரண்டுமே ஜெயம் ரவியை வைத்து இயக்கிய படங்களாகும். இரண்டுமே நல்ல வெற்றி கண்ட படங்களாக அமைந்தன. இதனாலே ஜெயம் ரவி தனது 25வது படத்ததை இயக்கும் வாய்பை லஷ்மனுக்கு வழங்கியுள்ளார்.

ஜெயம் ரவிக்கென்று தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் இருக்கிறது. அவரது படங்கள் என்றால் எந்தவிதமான ஆபாச வசனங்களும் இருக்காது. சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் நிச்சயம் இடம் பெறும் என்பதால், குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர்.

அவர் கடைசியாக நடித்த கோமாளி படமும் ஆல் சென்டர் ஹிட் தான். முக்கியமாக தனி ஒருவன் படத்திற்கு பின் இவருக்கென தமிழ் சினிமாவில் இளைஞர்கள் பட்டாளமும் ரசிகர் மன்றகளும் அதிகரித்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க இவரின் 25வது படம் பலத்த எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்தது.

தற்போது நமக்கு கிடைத்த தகவல்களின் படி படத்தின் தலைப்பு சர்வாதிகாரி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எப்போதும் தன் படங்களால் ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பவர் ஜெயம் ரவி. இந்த படத்தின் தலைப்பை கேட்ட பின் ஜெயம் ரவி நெகடிவ் ரோலில் நடிக்கப் போகிறாரா என்பதையும் ரசிகர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.

இதற்கிடையில், ஜெயம் ரவி தனது 26வது படத்தையும் தேர்வு செய்து விட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த படத்தை என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது லஷ்மன், ஜெயம் ரவி நடிக்கும் சர்வாதிகாரி படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பை அக்டோபர் 3ஆம் தேதியான நாளை துவங்க உள்ள நிலையில், ஜனவரியில் அஹமத் படத்தின் வேலைகள் துவங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X