Jayam Ravi: லட்டு மாதிரி 3 ஹீரோயின்ஸ்... வளைத்துப் போட்ட ஜெயம் ரவி... மனுசனுக்கு வாழ்வு தான் போங்க!

சென்னை: ஜெயம் ரவி கேரியரில் தனி ஒருவன் படத்திற்குப் பிறகு பொன்னியின் செல்வன் மிக முக்கியமானது.

இந்தப் படத்தின் வெற்றியால் ஜெயம் ரவி அடுத்தடுத்து முக்கியமான இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தற்போது இறைவன், ஜன கண மன, சைரன் போன்ற படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவிக்கு செம்ம ஜாக்பாட் அடித்துள்ளது.

அதன்படி ஜெயம் ரவியின் 32வது, 33வது படங்கள் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன.

 Jayam Ravi’s 32nd Film Will Have Three Heroines including Krithi Shetty and Kalyani Priyadarshan

ஜெயம் ரவியை வட்டமடிக்கும் நாயகிகள்: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்தார். ஜெயம் ரவி கேரியரில் மிக முக்கியமான படமாக பொன்னியின் செல்வன் அமைந்தது. இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியானதை தொடர்ந்து ஜெயம் ரவி தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இறைவன், ஜன கண மன, சைரன் ஆகிய படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமான ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் ஐசரி கணேஷே அறிவித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜெயம் ரவியின் 32வது படத்துக்கு ஜெனி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இதில் மொத்தம் மூன்று நாயகிகளை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, கல்யாணி பிரியதர்ஷன், க்ருத்தி ஷெட்டி இருவரும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர். இவர்கள் தவிர இன்னொரு நாயகியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 Jayam Ravi’s 32nd Film Will Have Three Heroines including Krithi Shetty and Kalyani Priyadarshan

அதேபோல் ஜெயம் ரவியின் 33வது படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளாராம். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளாராம். இந்தப் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்கவுள்ளார். அவரால் முடியாதபட்சத்தில் அனிருத் கமிட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்ம ரொமாண்டிக் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

ஒரேபடத்திற்காக லட்டு போல மூன்று நாயகிகளை தட்டித் தூக்கியுள்ள ஜெயம் ரவியை பார்த்து கோலிவுட்டே ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகிறது. அதேபோல், அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள், ஏஆர் ரஹ்மான் இசை என எல்லாமே ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் பொன்னியின் செல்வன் வெற்றிதான் காரணம் என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X