கெட்ட வார்த்தை பேசும் ஜெயம் ரவி.. நோ கட்.. நோ மியூட்.. வெளியானது அகிலன் டிரைலர்!

சென்னை : நடிகர் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அகிலன். இப்படத்தில், ஜெயம் ரவி கேங்ஸ்டராகவும், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். .

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படம் மார்ச் 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

கடந்த ஆண்டு வெளியான வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது. இதில், விக்ரம், கார்த்தி, திரிஷா, நாசர், பிரபு,ஜெயம் ரவி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இரண்டாம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ளது.

அகிலன்

அகிலன்

மிகப்பெரிய மாஸ் வெற்றிப்படத்தை கொடுத்த ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் அகிலன். சென்னை துறைமுகத்தை சுற்றி நடக்கும் கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

இந்நிலையில், அகிலன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், அகிலன் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியானது. இதில் தீப்பொறிகளுக்கு இடையே ஜெயம் ரவி மாஸா வருகிறார். இதில் கேங்ஸ்டராக நடித்துள்ள ஜெயம் ரவி, குற்ற உணர்ச்சி, நன்றி, விஸ்வாசம், கற்பு, ஒழுக்கம் இது எல்லாம், இந்த சமுகம் நம்மை அடிமையாக வைத்து இருப்பதற்காகவே உருவானது என, வசனம் அனல் பறக்கிறது. நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள ஜெயம் ரவி அதிரடியாக கெட்டவார்த்தையும் பேசியுள்ளார். அது டிரைலரில் மியூட் போடாமல் வந்துள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் டிராண்டாக்கி வருகின்றனர்.

ஜெயம் ரவி பேச்சு

ஜெயம் ரவி பேச்சு

முன்னதாக சென்னையில் நடித்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசி ஜெயம் ரவி, 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு, பாரட்டு நிறைய கிடைத்துள்ளது. எப்போதும் நண்பர்களாக இருக்கலாம் என ஆசைப்படுகிறேன். அகிலன் படம் மிகவும் கஷ்டமான படம், இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்தபோது, தயாரிப்பாளரால் இது சாத்தியமானது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X