Agilan Review: கடல் ராசாவாக கலக்கினாரா ஜெயம் ரவி? அகிலன் படம் எப்படி இருக்கு?

சென்னை: கருப்பு நிற மேக்கப் போட்டுக் கொண்டு டார்க் ஸ்கின் டோன் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி புதுவித கெட்டப்பில் நடிகர் ஜெயம் ரவி தர லோக்கலாக சரளமாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசி நடித்துள்ள அகிலன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

பாக்ஸிங் பின்னணியில் வெளியான பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது அகிலன்.

அகிலன் படத்தின் FDFSஐ பார்த்த ரசிகர்கள் அந்த படத்திற்கு கொடுத்துள்ள ரேட்டிங் என்ன என்று இங்கே பார்ப்போம்..

ஜெயம் ரவியின் அகிலன்

ஜெயம் ரவியின் அகிலன்

ஹார்பரில் நடக்கும் கடத்தல் மற்றும் மாஃபியா பற்றிய கதையாக அகிலன் திரைப்படம் உருவாகி உள்ளது. பூலோகம் படத்தில் விளம்பரத்திற்காக நடத்தப்படும் சண்டை விளையாட்டுகள் குறித்து தோலுரித்து இருந்த இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தில் ஹார்பரில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை சமூக அக்கறையுடன் அம்பலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி உள்ளார். தனது முயற்சியில் அவர் வென்றாரா? இல்லையா? அகிலனாக ஜெயம் ரவி மிரட்டினாரா? என்பது குறித்து ரசிகர்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இங்கே காணலாம்..

பாசிட்டிவ் நெகட்டிவ்

பாசிட்டிவ் நெகட்டிவ்

அகிலன் படம் அருமையாகவே உள்ளது என்றும் படத்தின் பாசிட்டிவ் என்றால் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் என நடிகர்கள் தேர்வு, கதை, ஆக்‌ஷன் காட்சிகள், பின்னணி இசை பலமாக உள்ளது என்றும் நெகட்டிவ் என்று பார்த்தால் 2ம் பாதியில் வரும் சில தொய்வான காட்சிகள் தான் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

எவ்வளவு ரேட்டிங்

எவ்வளவு ரேட்டிங்

அகிலன் திரைப்படம் தரமான படமாக உள்ளது என Good போட்டுள்ளார் இந்த ரசிகர். ஜெயம் ரவியின் பர்ஃபார்மன்ஸ் வழக்கம் போலவே அட்டகாசம் என்றும் சாம் சி.எஸ். பின்னணி இசை தெறிக்குது என படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அடுக்கி உள்ள இந்த ரசிகர் 3.5 ரேட்டிங்கையும் கொடுத்துள்ளார்.

துறைமுக காட்சிகள்

துறைமுக காட்சிகள்

பில்ட் அப் பண்ணும் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல், தேவைக்கு ஏற்ப ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து இருக்கிறார் இயக்குநர். நல்லா ரிசர்ச் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் அந்த ஹார்பர் போர்ஷன் ரொம்பவே புதிதாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வியப்பை அளிக்கும் என விமர்சகர் ஸ்ரீதேவி ஸ்ரீதர் அகிலன் படத்துக்கு 3 ரேட்டிங் கொடுத்திருக்கிறார்.

செகண்ட் ஹாஃப் ஸ்லோ

செகண்ட் ஹாஃப் ஸ்லோ

அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் மின்னல் வேகத்தில் மிரட்டலாக செல்கிறது என்றும் கெட்டவனாக ஜெயம் ரவி என்ன காரணத்திற்காக மாறுகிறார் என்பதை காட்டும் இரண்டாம் பாதி ரொம்பவே ஸ்லோவாக செல்வது படத்திற்கு வேகத்தடையாக இருந்தாலும், கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் தான் அகிலன் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அதிகப்படியான பாசிட்டிவ் விமர்சனங்களையும் இரண்டாம் பாதி மீது சில குறைகளையும் நெட்டிசன்கள் ட்விட்டர் விமர்சனத்தில் முன் வைத்துள்ளனர்.

கிரே ஷேடில் ஜெயம் ரவி

கிரே ஷேடில் ஜெயம் ரவி

ஆதி பகவன் படத்திலேயே கிரே ஷேடில் தன்னால் நடித்து மிரட்ட முடியும் என நிரூபித்த ஜெயம் ரவி அகிலன் படத்திலும் கிரே ஷேடில் ஹார்பரில் ஏகப்பட்ட திருட்டு வேலைகளை செய்து கீழே இருந்து மேலே வந்தவனாக நடித்து மாஸ் காட்டி இருக்கிறார். இயக்குநர் கல்யாண் ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து ஹார்பரில் எப்படியெல்லாம் நடக்கும் என்பதை கண்முன்னே காட்டியிருப்பது பிரம்மிக்க வைக்கிறது என விமர்சகர் ராஜசேகர் ட்வீட் போட்டுள்ளார்.

ரமேஷ் பாலா விமர்சனம்

ரமேஷ் பாலா விமர்சனம்

ஹார்பர் பேக்டிராப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக டீட்டெய்லிங்கில் பட்டையக் கிளப்புது அகிலன் திரைப்படம். ஜெயம் ரவி சரியான கதையை தேர்வு செய்வதில் இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. நிச்சயம் படம் ரசிகர்களை கவரும் என ரமேஷ் பாலா தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X