Don't Miss!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெயம் ரவியின் பூலோகம் டிரெய்லர் வெளியானது... படம் 24 முதல்
சென்னை: ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான பூலோகம் திரைப்படத்தின் டிரெய்லர் சற்று முன்னர் வெளியானது. படம் வருகின்ற 24 ம் தேதி வெளியாகிறது.
ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பொன்வண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் உருவான பூலோகம் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டங்களால் இப்படத்தை நீண்ட நாட்களாக வெளியிடாமல் கிடப்பில் போட்டு இருந்தனர்.
ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் என்று அடுத்தடுத்து ஜெயம் ரவி வெற்றியை சுவைத்திருக்கும் இந்த நேரத்தில் அவரின் விருப்பப்படமான பூலோகமும் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் சற்று முன்னர் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 2 நிமிடங்களுக்கும் சற்றுக் குறைவாக ஓடக்கூடிய இந்த டிரெய்லர் முழுவதும் குத்துச்சண்டை மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறது.
"அவன் பொழைப்புக்கு பாக்ஸர் நான் பொறந்ததுலேருந்து பாக்ஸர்" என்று ஆங்காங்கே கிடைத்த கேப்பில் ஜெயம் ரவி சிக்ஸர் அடித்திருக்கிறார். நாயகி த்ரிஷா ஒருசில இடங்களில் வந்து செல்கிறார்.
படத்தின் டிரெய்லர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
A film very close to my heart releases on Dec 24th @trishtrashers @sonymusicindia @Aascars enjoy the trailer at 6pm pic.twitter.com/iAsys8qVqu
— Jayam Ravi (@actor_jayamravi) December 15, 2015
"எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பூலோகம் திரைப்படம் வருகின்ற 24 ம் தேதியும், டிரெய்லர் இன்று மாலையும் வெளியாகிறது" என்று படத்தின் நாயகன் ஜெயம்ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 2 வருடம் கழித்து வெளியாகும் இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீரராக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். சூர்யாவின் 24, விமலின் அஞ்சலை, ரமேஷ் சுப்பிரமணியத்தின் வில் அம்பு ஆகிய படங்களுடன் ஜெயம் ரவியின் பூலோகமும் 24 ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!