சூர்யா.. விஜய் சேதுபதியை தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸாகும் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்!
சென்னை: சூர்யா, விஜய்சேதுபதியை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகரின் படம் ஓடிடி பிளாட்ஃபார்மில் ரிலீஸ் ஆகவுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பபட்டுள்ளன.
இதன் காரணமாக பல படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் தயாரிப்பாளர்களின் நலன் கருதி படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

ஓடிடி ரிலீஸ்
தமிழ் மட்டுமின்றி இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

க பெ ரணசிங்கம்
சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூரரைப்போற்று திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் விஜய் சேதுபதியின் க பெ ரணசிங்கம் படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

பூமி திரைப்படம்
இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் லட்சுமண் இயக்கிய 'பூமி' திரைப்படமும் ஓடிடியில் ரிலிஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராக இருந்த இப்படம் கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக தள்ளிப் போனது.

நிதி அகர்வால் ஜோடி
பூமி திரைப்படம் ஜெயம் ரவியின் 25வது படமாகும். இந்தப் படத்தில் அவர் ஒரு புரட்சி விவசாயி ஆக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோஹித் ராய், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

விரைவில் அறிவிப்பு
பூமி திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்ததிருக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுஜாதா விஜயக்குமார் தயாரித்துள்ள இந்தப் படம், ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யவில்லை. இருப்பினும் அதுதொடர்பான பேச்சுவார்த்தை அனைத்தும் முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











