அதிகாரபூர்வ அறிவிப்பு.. ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது ஜெயம் ரவியின் பூமி..ரசிகர்களுக்கு டச்சிங் லட்டர்!
சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், பொங்கல் அன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் 25-வது படம், 'பூமி'. இதை, லக்ஷமண் இயக்கியுள்ளார்.
இவர், ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியவர்.

நிதி அகர்வால்
இதில் ஜெயம் ரவி ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார். இமான் இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் படம் மே 1 அன்று வெளியாக இருந்தது.

ரிலீஸ் ஒத்திவைப்பு
கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால் இந்தப் படத்தின் ரிலீஸும் பாதிக்கப்பட்டது. இதனால் இதன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் உட்பட பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாயின. இதனால், இந்தப் படமும் ஓடிடி-யில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். பொங்கல் அன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நெருக்கமான படம்
இந்நிலையில் ஓடிடியில் வெளியிடுவது பற்றி நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பூமி படம் என் சினிமா பயணத்தில் மைல்கல். எனக்கு இது 25 வது படம் என்பதைத் தாண்டி என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட்-19 காலங்களில் வெளியாகும் படங்களில் இதுவும் சேர்ந்திருக்கிறது.

வேறொரு திட்டம்
உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன். ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. இந்தப்படம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

ஆசிர்வாதம்
பல பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து எனது படத்தை பார்த்து பண்டிகையை கொண்டாடி இருக்கிறீர்கள். இந்தப் பொங்கல் தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களைச் சந்திப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











