உழைப்பாளர் தினத்தை டார்கெட் செய்த ஜெயம்ரவி.. இந்த சம்மருக்கு ஜெயம் ரவியும் பராக்!

சென்னை: லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படம் இந்த ஆண்டு மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.

Recommended Video

Bhoomi Review Tamil | பூமி - திரை விமர்சனம் |Tamil Filmibeat

ஜெயம் ரவியின் பூமி படத்தின் செகண்ட் லுக்குடன் இந்த அறிவிப்பு வெளியானது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ஜெயம் ரவியின் விவசாயி கெட்டப் வெளியான நிலையில், இரண்டாவது லுக்கில் ஜெயம் ரவி மற்றும் நாயகி நித்தி அகர்வால் பைக்கில் வரும் வில்லேஜ் கெட்டப் லுக் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவியின் பூமி

நல்ல கதைகளை தேர்வு செய்து வித்தியாசமான நடிப்பை கொடுத்து தனது ரசிகர்களை என்றுமே உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. இயக்குநர் லக்‌ஷ்மன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ஜெயம் ரவி பூமி என்ற தலைப்பில் விவசாய சப்ஜெக்டை கையில் எடுத்துள்ளார். மே 1ம் தேதி பூமி படம் திரைக்கு வருகிறது.

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

இயக்குநர் லக்‌ஷ்மன் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜெயம் ரவி இணைந்துள்ள படம் தான் பூமி. இந்த படத்தில் விவசாயத்தை தாண்டியும் நிறைய விஷயங்கள் உள்ளதாக இயக்குநர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்

உழவர்கள் பெருமையை போற்றும் விதமாக உருவாகி வரும் பூமி படத்தை உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் செய்ய பக்காவாக ஜெயம் ரவி திட்டமிட்டுள்ளார்.

இந்த சம்மருக்கு

இந்த சம்மருக்கு

இந்த சம்மருக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகவுள்ள நிலையில், ஜெயம் ரவியும் சம்மருக்கு களமிறங்கியுள்ளார். மாஸ்டர் மற்றும் சூரரைப் போற்று ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்காவாக மே 1ம் தேதியை ஜெயம் ரவி முன்கூட்டியே புக் செய்துள்ளார்.

நித்தி அகர்வால்

நித்தி அகர்வால்

டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் கலக்கி வரும் நித்தி அகர்வால் பூமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அடியெடுத்து வைக்கவுள்ளார். முன்னா மைக்கேல், ஐ ஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஜ்னு, சவ்யாசாச்சி உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நித்தி சிறப்பாக நடித்துள்ளார். பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார் நித்தி அகர்வால்.

வேற லெவல் ஜெயம் ரவி

வேற லெவல் ஜெயம் ரவி

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பூமி, ஜன கன மண, பொன்னியின் செல்வன் என பல பெரிய படங்களில் ஜெயம் ரவி தொடர்ந்து நடித்து வருகிறார். தனி ஒருவன் 2ம் பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இமான் இசை

இமான் இசை

பூமி படத்திற்காக ஜன கண மண பாடலை புதிய முறையில் இசையமைப்பாளர் இமான் வடிவமைத்துள்ளார். கிராமத்து சப்ஜெக்ட் படங்கள் என்றாலே இமான் தான் இசையமைப்பாளர் என தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து கலக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X