#ComaliFirstLook : நீங்க மட்டும் இல்ல ஜெயம் ரவி.. உங்க போஸ்டரைப் பார்க்குற நாங்களும் ‘கோமாளி’ தான்!

ஜெயம் ரவியின் கோமாளி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

அடங்க மறு படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தில் முதன்முறையாக ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் அவர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

மேலும், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஐசரி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

மற்றவை ரகசியம்:

மற்றவை ரகசியம்:

ஜெயம் ரவியின் ஒன்பது விதமான வேடங்களில், பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த அடிமை, ஆதிவாசி, 1990களில் வாழ்ந்த இளைஞர், ராஜா என நான்கை மட்டும் படக்குழுவினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். மீதமுள்ள 5 வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக ஜெயம் ரவி 18 கிலோ எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பர்ஸ்ட் லுக் வெளியானது:

பர்ஸ்ட் லுக் வெளியானது:

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதில் மன நோயாளி போன்று ஜெயம் ரவி காட்சியளிக்கிறார். அவரைச் சுற்றி சமூகவலைதளங்களின் குறியீடுகள் உள்ளன. அதோடு, கோமாளி என்ற எழுத்துக்களில் முறையே 1990, 2000, 2005, 2010, 2013, 2016 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

டிரெண்டிங்:

டிரெண்டிங்:

இந்த வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். #ComaliFirstLook என்ற ஹேஷ்டாகை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

நாமும் கோமாளி தான்:

நாமும் கோமாளி தான்:

இந்த போஸ்டரின் அடிப்படையில் பார்த்தால் நாமும் கோமாளிகள் தான். ஏனென்றால் கூட்டத்தில் நின்றாலும் கூட, பெரும்பாலானோர் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசாமல் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸப் என சமூகவலைதளங்களில் தான் மூழ்கிக் கிடக்கின்றனர். தானாக பேசி சிரித்துக் கொண்டு நாமும் மன நோயாளிகளாகத் தான் மாறி வருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X