என்ன இத்தனை கோடி வசூலா?!.. கோமாளி படம் புதிய சாதனை.. ஜெயம் ரவி செம ஹாப்பி!
நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் யாருமே எதிர்பார்க்காத வசூலை பெற்று சாதனை படைத்து உள்ளது.
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் யாருமே எதிர்பார்க்காத வசூலை பெற்று சாதனை படைத்து உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பிரதாப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.
படம் பெரிய விளம்பரம் எதுவும் இல்லாமல் வெளியாகி இருந்தது. இணையம் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து படக்குழு இந்த படத்தை வெளியிட்டு இருந்தது.

எப்படி ஹிட்
இந்த படம் முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனம் பெற்றது. பெரிய விமர்சகர்கள் எல்லோரும் படத்தை பாராட்டி பேசி இருந்தனர். குடும்பத்தோடு பார்க்கும் அளவிற்க்கு படம் நன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

செம பாஸ்
இதனால் இந்த படம் பல்வேறு தரப்புகளில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பும், யோகி பாபுவின் காமெடியும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. ஜெயம் ரவிக்கும் இரண்டு தொடர் தோல்விகளை தொடர்ந்து இந்த படம் பெரிய பிரேக்காக அமைந்தது.

என்ன வசூல்
இந்த நிலையில் கோமாளி படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெயம் ரவி டிவிட் செய்துள்ளார். தனி ஒருவனுக்கு பிறகு கோமாளி படம் மிகப்பெரிய ஹிட் படமாக ஜெயம் ரவிக்கு அமைந்துள்ளது.

என்ன பரிசு
படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்கனவே இதன் வெற்றியால் இயக்குனர் பிரதாப் ரங்கநாதனுக்கு புதிய ஹோண்டா சிட்டி கார் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பல மொழிகளில் மொழி பெயர்க்க இப்போதே பலர் அடித்து பிடித்துக் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தி என்ன
ஏற்கனவே கோமாளி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கி விட்டார். தெலுங்கிலும், கன்னடாவிலும் இதை ரீமேக் செய்யலாமா, இல்லை டப்பிங் செய்து வெளியிடலாமா என்று பேசி வருகிறார்கள். பெரும்பாலும் படத்தை ரீமேக் செய்வார்கள் என்றே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











