Comali Trailer: ரஜினியின் அரசியல் பிரவேசம்.. இது வேற லெவல் கலாய் ‘கோமாளி’.. ஜெயம் ரவி கெத்து தான்!
ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தில் ரஜினியை செமையாக கேலி செய்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. காஜல் அகர்வால், யோகி பாபு, ஷாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்க ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்கள் போட்டிருக்கிறார். அதில் பள்ளி மாணவர் வேடமும் ஒன்று. இப்படம் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது.
கோமாளி டிரெய்லர்
இந்நிலையில் கோமாளி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 2 நிமிடம் 15 வினாடிகள் ஓடிக்கூடிய அந்த டிரெய்லரில் முதல் பிரேமில் இருந்த செம கலாய் தான்.

கோமாவில் ஜெயம் ரவி
16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து மீண்டு எழுகிறார் ஜெயம் ரவி. பெரியதாக மாறிவிட்ட உலகை ஜெயம் ரவிக்கு அறிமுகப்படுத்துகிறார் யோகி பாபு. அதன் வழியாக பல விஷயங்களை செமையாக கலாய்க்கின்றனர்.

ரஜினியை செம கலாய்
இதன் அல்டிமேட் விஷயம், டிரெய்லரின் கடைசியில் வரும் காட்சி தான். 'இது 2016 ஆம் வருடம், வேண்டும் என்றால் டிவியை பாரு' என ஜெயம் ரவியிடம் கூறுகிறார் யோகி பாபு. செய்தி தொலைக்காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவேன் என அறிவிக்கும் காட்சி ஓடுகிறது. அதை பார்க்கும் ஜெயம் ரவி இது 1996 எனக் கூறி தான் கோமாவில் இருந்ததை நம்ப மறுக்கிறார்.

பெரிய விஷயம்
பொதுவாக இந்த விஷயத்தில் ரஜினியை பலரும் கலாய்ப்பது உண்டு. ஆனால் யாரும் நேரடியாக செய்யதது இல்லை. ஐடியா இயக்குனருடையதாக இருந்தாலும், ஜெயம் ரவி நேரடியாக ரஜினியை கலாய்த்திருப்பது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











