அதே கிளாமரோட திரும்பி வந்துட்டேனு சொல்லு...ஜெயம் ரவி பட நாயகி ரிட்டன்ஸ்
சென்னை : 2006 ம் ஆண்டு கே.பாலசந்தர் தயாரிப்பில், சரண் இயக்கிய இதய திருடன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காம்னா ஜெத்மலானி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்த காம்னா, 2014 ல் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான சுரஜ் நக்பாலை திருணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டோர்.

தற்போது சுமார் 6 வருடங்களுக்கு கருடா என்ற கன்னட படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சித்தார்த் மகேஷ் மற்றும் ஸ்ரீநகர் கிட்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மீண்டும் நடிக்க வந்துள்ளதை தெரிவிப்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமரான படங்களை காம்னா பகிர்ந்துள்ளார். 15 வருடத்திற்கு முன் நடிக்க வந்த போது முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல், உடல் எடையை குறைத்து, படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
காம்னா வெளியிட்டுள்ள இந்த போட்டோக்கள் ரசிகர்களை மட்டுமல்ல, மற்ற இளம் நடிகைகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











